கமென்ட் கோயிந்து
சக்திவேல் மருதமுத்து
டிஜிட்டல் முறையில் பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தம்: செய்தி அதைப் பத்தி நமக்கு என்ன கவலை? நமக்கு முன்னாடி உக்காந்திருக்கவன்தான் கவலைப்படணும்!
 வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவையில்லை: அமெரிக்க அதிபர் டிரம்ப் பக்கத்து வீட்டு ருக்குமணி மக, ‘கட்டுனா அமெரிக்க மாப்பிள்ளையைத்தான் கட்டுவேன்’னு ஒத்தைக்காலுல நின்னுச்சி. அந்த புள்ள கனவுல இப்புடி ஒரு லாரி மண்ணை அள்ளிப் போட்டுட்டாய்ங்களே!
கர்நாடகாவில் டாய்லெட் ஸிங்க்கில் 70 லட்ச ரூபாய் பறிமுதல்: செய்தி நல்லா பாருங்க ஏட்டய்யா! ஏ.டி.எம் மெஷினை, இந்த ஒரு மாசத்துல டாய்லெட் ஸிங் மாதிரி ஆக்கியிருக்க போறானுவ...
அ.தி.மு.க.வில் வீண் வதந்திகளுக்கு இடமில்லை, கட்சி கட்டுக்கோப்பாக இருக்கிறது: வைகோ அண்ணன்தான் அந்த ‘பி டீம்’ங்கறதை அப்பப்ப நிரூபிச்சிட்டே இருக்காப்ல...
விஜய் மல்லையாவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்: செய்தி அப்பவே பேங்க் அக்கவுன்ட்டை முடக்காம வுட்டுட்டு இப்ப ட்விட்டர் அக்கவுன்ட்டை முடக்கிட்டு திரியிறாய்ங்க...
சசிகலா காலில் விழும் அ.தி.மு.க அமைச்சர்கள்: செய்தி என்னய்யா இது... இனிமே சேலை கட்டிருக்க பொம்மையை பாத்தா கூட கால்ல விழுந்துருவீங்க போலருக்கே!
ஓவியங்கள்: கண்ணா
|