jokes
தயாரிப்பாளர்: ‘‘நம்ம படத்துக்கு எதுக்கு ஏ.டி.எம்னு பேர் வெச்சீங்க?’’ டைரக்டர்: ‘‘கூட்டம் அலை மோதணும்னு நீங்கதானே சார் சொன்னீங்க...’’ - கொளக்குடி சரவணன்.
 போலீஸ்: ‘‘திருடப்போன வீட்ல இருந்த ஆளை எதுக்கு அடிச்சே?’’ திருடன்: ‘‘பழைய ரூபாய் நோட்டுகளை மாத்தாம இன்னும் அப்படியே வெச்சிருந்தான் எசமான், அதான்.’’ - கொளக்குடி சரவணன்.
‘‘டீமானிடைசேஷன் அறிவிப்புக்குப் பிறகு, டாடி கிட்ட செம மாற்றம்...’’ ‘‘என்ன...?’’ ‘‘பாக்கெட் மணி கேட்டா, 500, 1000னு கொடுக்கறார்...’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
|