நட்பு மொழி
-அறிவுமதி
* திருமண வரவேற்பில் பரிசுப் பொருள் தருகிற காதலித்தவனை யாரோவாய்ப் பார்க்கிற பெண்கள் வெட்கப்பட அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிேறன் என் திருமணத்தை ஏற்பாடு செய்த நண்பன் இவன்தான் என்று * மனைவியின் நண்பனை நண்பனாக ஏற்றுக் கொண்டவனுக்கு எந்த மருத்துவப் பரிசோதனையும் எப்போதும் தேவைப்படாது
 * காமத்தால் பிறக்கலாம் நட்பால் பறக்கலாம்
* மனைவிக்குத் தெரியாத காமம் தவறு கணவனுக்குத் தெரிந்த நட்பு சரி
* அம்மாவோடான அப்பாவின் சண்டையைத் தீர்த்து வைக்கக் குழந்தைகள் போதும் அப்பாவோடான அம்மாவின் சண்டையைத் தீர்த்து வைக்க நண்பன் வேண்டும்
ஓவியம்: ப்ரத்யூஷ்
|