- 16:10மோடி அலை வட இந்தியாவில் இல்லை, மோடி அலை என்பது மாயை; குதிரை பேரம் நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது, கவலை அளிக்கிறது; ராமர் கோயிலை வைத்து அரசியல் செய்தது வெற்றி பெறவில்லை - திருமாவளவன் பேட்டி
- 16:5டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு இன்று இரவு 7 மணிக்கு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
- 16:4சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுகவின் முக்கிய நிர்வாகிகளோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
- 16:1பஞ்சாப் முன்னாள் முதல்வரும் காங். வேட்பாளருமான சரன்ஜித் சிங் சன்னி 1.76 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
- 15:52நாகை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் வெற்றி
- 15:51தஞ்சை தொகுதியில் திமுக வேட்பாளர் முரசொலி வெற்றி
- 15:50தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி
- 15:49கர்நாடகா மாநிலம் ஹாவேரி தொகுதியில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை (பாஜக) வெற்றி
- 15:47ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
- 15:46விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மாறி மாறி முன்னிலை வகித்து வரும் நிலையில், விஜயகாந்த் நினைவிடத்தில் அவரது தாய் பிரேமலதா தியானத்தில் ஈடுபட்டு வருகிறார்
- 15:46ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
- 15:46மதுரை மக்களவைத் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி
- 15:46விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் வெற்றி
- 15:41ரேபரேலி தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி
- 14:48ஆந்திரா மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
- 14:45ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் தொகுதியில் பாஜகவின் மஞ்சு சர்மா வெற்றி
- 14:43தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி உறுதியானது; திமுக வேட்பாளர் கனிமொழி 2,55,718 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
- 14:35சிறையில் உள்ள ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், காண்டே சட்டமன்ற இடைத்தேர்தலில் முன்னிலை!
- 14:35இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவரான பியாந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் சுயேச்சையாக முன்னிலை!
- 14:35மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 32ல் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை
- 14:13நெல்லை மக்களவைத் தொகுதியில் 974 தபால் வாக்குகள் செல்லாதவை என அறிவிப்பு; 3,000 தபால் வாக்குகளில் காங்கிரஸ் 913 வாக்குகள், பாஜக 600 வாக்குகள் பெற்றுள்ளன
- 14:1பாஜக 238 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் ஆதரவை திரட்ட முயற்சி
- 14:0தெலுங்கு தேசம் இந்தியா கூட்டணியை ஆதரித்தால் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் என தகவல்
- 14:0ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் இதுவரை தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை
- 13:58நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!
- 13:17தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி மீண்டும் முன்னிலை
- 13:17விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மீண்டும் முன்னிலை: விஜயபிரபாகரன் பின்னடைவு
- 13:4பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி
- 13:1வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதை தேர்தல் ஆணையம் தாமதிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு; தேர்தல் ஆணைய இணையதளத்தில் கடந்த 2 மணி நேரமாக மந்த கதியில் தகவல் பதிவேற்றபடுவதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
- 12:7தூத்துக்குடி மக்களவை தொகுதியில் 1,11,434 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை; நாம் தமிழர் வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 40,356 வாக்குகள் பெற்று 3ம் இடத்திலும், பாஜக கூட்டணியில் போட்டியிட்ட தமாக வேட்பாளர் விஜய சீலன் 31,866 வாக்குகள் பெற்று 4ம் இடத்தில் உள்ளனர்.
- 12:5ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் தொகுதியில் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி பின்னடைவு
- 12:2இதுவரை வெளியான முடிவுகளின்படி பாஜக மட்டும் 235 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது; இந்தியா கூட்டணி 230 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் மட்டும் 99 இடங்களில் முன்னிலை; பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸ் 31 இடங்களில் முன்னிலையில் உள்ளது
- 11:58திருச்சூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி 30,000 வாக்குகள் முன்னிலை
- 11:55உ.பி. சுல்தான்பூர் தொகுதியில் மேனகா காந்தி 9,192 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு
- 11:54ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில்
பாஜக - பிஜு ஜனதா தளம் இடையே கடும் போட்டி
- 11:53ஆந்திராவில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கிறார் சந்திரபாபு நாயுடு; மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் 154 இடங்களைக் தெலுங்குதேசம் கூட்டணி கைப்பற்றுகிறது
- 11:49வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 33,794 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
- 11:48மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தொடர்ந்து முன்னிலை; 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் முன்னிலை பெற்றுள்ளார்
- 11:47புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 27,482 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
- 11:47மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
- 11:47நாகை தொகுதி இந்திய கம்யூ. வேட்பாளர் வை.செல்வராஜ் 30,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை
- 11:46திருவள்ளூரில் காங். வேட்பாளர் சசிகாந்த் செந்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை
- 11:46தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை
- 11:45திண்டுக்கல் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 1,28,489 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை
- 11:45தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தொடர்ந்து முன்னிலை; பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன் 2வது இடத்தில் உள்ளார்
- 11:44ஐதராபாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் மாதவி லதா பின்னடைவு: AIMIM வேட்பாளர் ஓவைசி முன்னிலை
- 11:44மகாராஷ்டிராவின் பாராமதி மக்களவத் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்சந்திரபவார்) வேட்பாளரும் சரத்பவாரின் மகளுமான சுப்ரியா சுலே முன்னிலை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவாரின் மனைவி சுனித்ரா பின்னடைவு
- 11:43பொள்ளாட்சி தொகுதியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 16,854 வாக்குகள் முன்னிலையில் உள்ள நிலையில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டம்
- 11:40சிதம்பரம் தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் 11,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை
- 11:34ஃபைசாபாத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 6,223 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை
- 11:29தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆலோசனை
- 11:20ஹரியானா மாநிலத்திலும் அதிக இடங்களைக் கைப்பற்றுகிறது காங்கிரஸ்
- 11:20பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது
- 11:2குஜராத் காந்திநகர் பாஜக வேட்பாளர் அமித் ஷா 1,99,732 வித்தியாசத்தில் முன்னிலை
- 11:2தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 12,513 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
- 11:1உ.பி. லக்னோ பாஜக வேட்பாளர் ராஜ்நாத் சிங் 16,806 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
- 11:1உ.பி.அமேதி பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானி 19,257 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு
- 11:1கேரளா திருவனந்தபுரம் காங். வேட்பாளர் சசிதரூர் 5,783 வாக்குகள் வித்தியாசத்தில்
பின்னடைவு
- 11:0கடலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 70,127 வாக்குகள் பெற்று முன்னிலை; தேமுதிக வேட்பாளர் சிவகொழுந்து 47,603 வாக்குகள் பெற்று 2ம் இடத்திலும், பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் 23,368 வாக்குகள் பெற்று 3ம் இடத்திலும் உள்ளனர்!
- 10:58ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி 57,729 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
- 10:58ஆந்திரா சட்டமன்ற தேர்தல் - பிதாபுரம் தொகுதியில் நடிகர் பவன்கல்யாண் 13,494 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்
- 10:57கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி 1,12,365 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
- 10:55கர்நாடகாவின் ஹசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளர் ப்ரஜ்வால் ரேவண்ணா பின்னடைவு
- 10:50தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 51,061 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
- 10:50மராட்டியத்தில் பாஜக கூட்டணி 21 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது
- 10:49சிதம்பரம் தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் 6,717 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
- 10:49ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர். ஆர்.பாலு 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
- 10:45ஆந்திரா சட்டமன்ற தேர்தல் : பித்தாபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஜனசேன தலைவர் பவன் கல்யாண் 7997 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
- 10:45மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 2 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் நாகா மக்கள் முன்னணி தலா 1 தொகுதிகளில் முன்னிலை
- 10:45ஆந்திரா சட்டமன்ற தேர்தல்: ஆந்திராவின் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா 5640 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு!
- 10:43கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் மலையரசன் 97,994 வாக்குகள் பெற்று முன்னிலை
- 10:43ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி 20,760 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்
- 10:43பெரம்பலூர் மக்களவைத் தொகுதியின் முதல் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளரை விட 19,012 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அருண் நேரு முன்னிலை!
- 10:40கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றுகிறது; கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் 17 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை; கேரளாவில் பாஜக 2 இடங்களிலும், ஆளும் கம்யூ. கூட்டணி ஒரு தொகுதியில் முன்னிலை
- 10:38உத்தரபிரதேசத்தில் ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தி தொகுதியில் சமாஜ்வாதி முன்னிலை
- 10:26பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் ஆம் ஆத்மி 3 இடங்களிலும் முன்னிலை
- 10:22வாரணாசியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த பிரதமர் மோடி, தற்போது 13638 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்
- 10:11திருநெல்வேலியில் முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் முன்னிலை; அதிமுகவை பின்னுக்குத் தள்ளி நாம் தமிழர் கட்சி 3வது இடம்
- 10:1புதுச்சேரியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி 3வது இடத்தில் உள்ளது; காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலையில் உள்ளார்
- 10:1வாரணாசியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த பிரதமர் மோடி தற்போது 436 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்
- 9:55நீலகிரி தொகுதியில் 1360 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை
- 9:54வாரணாசியில் பிரதமர் மோடி தொடர்ந்து பின்னடைவு; மோடியைவிட 1,628 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் முன்னிலை
- 9:42மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை; பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்தை விட 10,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார் தயாநிதி மாறன்
- 9:39தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலை
- 9:38கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
- 9:35ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி 2,126 வாக்குகள் முன்னிலை
- 9:34கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பெர்ஹாம்பூர் தொகுதியில் முன்னிலை
- 9:31சிதம்பரம் தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் 4,900 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
- 9:28உ.பி.யில் பெரும்பாலான தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றும் என்ற கருத்துக்கணிப்பு பொய்யானது; மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 37 தொகுதிகளில் முன்னிலை; பாஜக கூட்டணி 36 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது
- 9:28வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவு
- 9:27காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் முன்னிலை பெற்றுள்ளார்
- 9:18கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா முன்னிலை
- 9:14மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா 2,028 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
- 9:12வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 6,068 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
- 9:11தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 4,062 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
- 9:9பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு முன்னிலை!
- 9:8நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை
- 9:6விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை
- 9:5விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு பின்னடைவு
- 9:3திண்டுக்கல் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 2,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை
- 9:3தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி, 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
- 9:2தேனி தொகுதியில் டிடிவி தினகரன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்
- 9:2ராமநாதபுரம் தொகுதியில் 30% தபால் வாக்குகள் நிராகரிப்பு
- 9:0நீலகிரி தொகுதியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பின்னடைவு
- 9:0டெல்லியில் 7 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை
- 8:55கோவை தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பின்னடைவு
- 8:55ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
- 8:54தஞ்சை தொகுதியில் திமுக வேட்பாளர் முரசொலி 6,454 வாக்குகள் பெற்று முன்னிலை
- 8:54வேலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை!
- 8:53சிவகங்கை தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங். வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை: 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் உள்ளார்
- 8:52கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை
- 8:51திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பின்னடைவு
- 8:51கேரள மாநிலம் திருச்சூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் சுரேஷ்கோபி பின்னடைவு
- 8:50மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் 1,147 வாக்குகள் பெற்று முன்னிலை
- 8:50மத்திய சென்னை தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தயாநிதி மாறன் தொடர்ந்து முன்னிலை; முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் 4,000 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார் தயாநிதி மாறன்
- 8:48கர்நாடகா ஹசன் தொகுதியில் மஜத கட்சி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை
- 8:43கரூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை
- 8:43ஆந்திர சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தெலுங்கு தேசம் 3 இடங்களில் முன்னிலை
- 8:37வாரணாசியில் 3வது முறையாக களமிறங்கியுள்ள நரேந்திர மோடி முன்னிலையில் உள்ளார்
- 8:34மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடக்கம்
- 8:33தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தாமதமாக தொடக்கம்; 18 நிமிட தாமதத்திற்குப் பின் தபால் வாக்குப்பெட்டி முகவர்கள் முன்னிலையில் திறப்பு
- 8:33கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை பெற்றுள்ளார்
- 8:31கன்னியாகுமரியில் கத்தியுடன் வந்த சுயேச்சை வேட்பாளர் ராஜன் சிங்கை கைது செய்தது போலீஸ்
- 8:26நாடாளுமன்ற தேர்தல் 2024: இந்தியா கூட்டணி 108 தொகுதிகளிலும், பாஜக 85 தொகுதிகளிலும் முன்னிலை
- 8:25திருச்சி தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில் துரை வைகோ முன்னிலை
- 8:21வேலூரில் வாக்கு எண்ணும் மையத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் பொது இருக்கைகள் இல்லை என கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கூச்சல், குழப்பத்தால் தபால் வாக்கு எண்ணும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- 8:21மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலை!
- 8:21மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் முன்னிலை
- 8:2சிதம்பரம்: வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருகைதந்த விசிக வேட்பாளர் தொல் திருமாவளவன்!
- 8:2ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
- 7:53ஆரணிதொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள திருவண்ணாமலை சண்முகா பள்ளியில் சீல் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் திறப்பு!
- 7:50கடலூரில் : அனைத்துக் கட்சி தேர்தல் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறை திறக்கப்பட்டது
- 7:31கரூரில் வாக்கு எண்ணும் பணிக்கு சென்றபோது நுழைவுவாயிலில் தள்ளுமுள்ளு: பெண் ஒருவர் காயம்
- 7:9டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொண்டர்களுக்கு வழங்க பூரி, இனிப்பு வகைகள் சுடச்சுட தயாராகின்றன
- 6:57வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் முகவர்கள் செல்போன் எடுத்துச் செல்லத் தடை!
- 6:53குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு
- 6:24காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில், வாக்குச்சாவடி முகவர்கள் கடும் சோதனைக்கு பின் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுப்பப்படுகின்றனர்.
- 6:22தமிழ்நாட்டில் பாதுகாப்புப் பணியில் ஒரு லட்சம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்;
15 கம்பெனி துணை ராணுவப் படையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்
- மேலும்