பருவநிலை மாற்றத்தால் பரவும் சின்னம்மைஎச்சரிக்கை

மருத்துவர்களின் எச்சரிக்கைக்குக் காரணம் இல்லாமல் இல்லை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவலாக சின்னம்மையின் தாக்கம் வெளிப்பட தொடங்கி உள்ளது. குறிப்பாக திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை உட்பட மாவட்டம் முழுவதும் கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

 சின்னம்மையை ஏற்படுத்தும் வேரிசில்லா(Varicella) வைரஸ் தாக்கினால் உடலில் சக்தியை இழக்க நேரிடும். உடலில் கொப்பளங்கள் தோன்றும். இந்நோயால் பாதித்தவர்கள் தும்முவதால் எளிதில் அடுத்தவருக்கும் பரவும். எனவே, சின்னம்மை தாக்கியவர்களைத் தனிமைப்படுத்தி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

வெயிலில் அதிகமாக அலைந்து திரிவது, பாதுகாப்பற்ற குடிநீர் அருந்துதல் ஆகியவற்றால் ‘வேரிசில்லா’ என்ற வைரஸ் மூலம் சின்னம்மை பரவுகிறது.
‘நோயால் பாதித்தவர்களின் உடைகளை துவைத்து, அவற்றை வெயிலில் உலர்த்த வேண்டும். இளநீர், மோர், நுங்கு, பழச்சாறு ஆகியவற்றை பாதிக்கப்பட்டவர் அருந்தலாம். அனைத்து கிராம செவிலியர்களிடமும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சின்னம்மை வராமல் தடுக்கும் மாத்திரைகள் இருப்பில் உள்ளன. முறையான சிகிச்சையால் இந்நோயைக் கட்டுப்படுத்துவதோடு, வராமலும் தடுக்கலாம்’ என்று ஆலோசனையையும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

- கௌதம்