இந்தியாவுக்கு கொரோனா ஆபத்து குறைவு... ஏன் தெரியுமா?!



மகிழ்ச்சி

உலகமெல்லாம் கொரோனா பீதியைக் கிளப்பினாலும் இந்தியாவுக்கு அந்த ஆபத்து மிகவும் குறைவுதான் என்கிறார்கள் நிபுணர்கள். அதற்காக சொல்லப்படும் காரணங்களும் வலுவானவையாகவே இருக்கிறது.

சீனாவில் தற்போது குளிர்காலம் நிலவி வருகிறது. சீனாவின் பாதிப்புக்கு இது முக்கிய காரணம். கொரோனா வைரஸ் குளிரான சீதோஷ்ண நிலையில் பல்கிப் பெருகி, தாக்கக் கூடியது. ஆனால், இந்தியாவில் இயல்பாகவே வெப்பம் அதிகம். அது மட்டுமின்றி இந்தியாவில் தற்போது பனி காலம் முடிந்து வெயில் தொடங்கிவிட்டது. எனவே, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் மிகவும் குறைவுதான்.

அதேபோல் சீனர்களின் வித்தியாசமான உணவுப்பழக்கமும் இந்த வைரஸ் தொற்று பரவுவதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது என்றும் பல நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். சீனர்கள் முழுமையாக வேக வைக்காத Half boiled உணவை உண்ணும் பழக்கம் உள்ளவர்கள் என்பது பலரும் அறிந்ததுதான். அதேபோல் ஊர்வன, பறப்பன, நடப்பன என்று எந்த வகையான உயிரினங்களையும் விட்டு வைக்காமல் உண்ணக் கூடியவர்கள் என்பதும் பலரும் கேள்விப்பட்டிருப்போம்.

இந்தியாவில் அத்தனை தீவிரமான அசைவ உணவுப்பழக்கம் இல்லை. சராசரியாக வாரத்தில் மூன்று நாட்கள் அசைவ உணவு சாப்பிடுகிறார்கள் என்று பொதுவான கணக்கு ஒன்று உண்டு. அது மட்டுமில்லாமல் நம்முடைய இறைச்சிக்கான ஆதாரங்களும் ஆடு, கோழி, மீன் என்று மிகவும் குறைவான விரல் விட்டு எண்ணக் கூடிய உயிரினங்களே! சீனாவில் சாப்பிடுகிற உயிரினங்களின் பட்டியலைச் சொன்னால் தலை சுற்றும்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக இந்தியர்கள் அதிக வெப்பத்தில் எந்த உணவாக இருந்தாலும் சமைக்கக் கூடிய பழக்கம் உள்ளவர்கள். அதிலும் இறைச்சி என்றால் இன்னும் அதிக வெப்பத்தில் சமைப்பார்கள். நிறைய மசாலா பொருட்களையும் சேர்ப்பார்கள். சுவைக்காக சேர்க்கப்படும் பல மசாலா பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தது என்பது நமக்குத் தெரிந்ததுதான்.

இதனால்தான் இந்தியாவில் கொரோனா கவலை வேண்டாம் என்று நம்பிக்கை அளிக்கிறார்கள் பல நிபுணர்கள். அதற்காக, கொரோனா குறித்து அலட்சியமாகவும் இருந்துவிடாதீர்கள் என்பதும் முக்கியம் என்று இறுதியாக எச்சரிக்கிறார்கள்.

- ஜி.ஸ்ரீவித்யா