புற்றுநோயாளிகளுக்கு நற்செய்தி...



மகிழ்ச்சி

புற்றுநோயை குணப்படுத்தும் 9 வகையான மருந்துகளின் விலையை சுமார் 87 சதவிகிதம் குறைத்து மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (National Pharmaceutical Pricing Authority) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டில் மட்டுமே சுமார் 8 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். மத்திய அரசின் விலைக் குறைப்பு நடவடிக்கையால் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், மருந்து விலை குறைப்பு அமலுக்கு வந்ததை கண்டிப்பாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று மருந்து உற்பத்தியாளர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனையாளர்கள், விற்பனைப் பிரதிநிதிகள், மருந்து தயாரிப்பாளர்கள் மற்றும் மருத்துவமனைகளிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன் விவரம்...

கீமோ தெரபி இன்ஜெக்சன்(500 mg) முன்பு ரூ.22,000, தற்போது ரூ.2,800/-
கீமோ தெரபி இன்ஜெக்சன் (100 mg) முன்பு ரூ.7,700, தற்போது ரூ.800/-
எல்லோடினிப் மாத்திரை (150mg) முன்பு ரூ8,800/, தற்போது ரூ.2,400/-
எவரோலிமஸ் (0.5mg) முன்பு ரூ.1,452/- தற்போது ரூ.739/-

- உஷா நாராயணன்