டியர் டாக்டர்



* ‘பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்?!’ என்ற தலைப்பே நிறைய யோசிக்க வைத்தது. ஆரோக்கியமான வாழ்வு என்பது சுற்றுச்சூழலையும் சார்ந்தது என்பதை உணர்ந்து கவர் ஸ்டோரியை வழங்கியிருந்தீர்கள். பொறுப்புமிக்க ஒரு கட்டுரைக்காக உங்களுக்கு பாராட்டும்... நன்றியும்! - விஸ்வநாதன், வேலூர்.

* டாக்டர்களும் மனிதர்கள்தான்... அவர்களுக்கும் பல பிரச்னைகள் உள்ளன என்பதனைத் தெளிவாக தெரியப்படுத்தியமைக்கு நன்றி. ‘வீட்டிலேயே தயாரிக்கலாம் ஹெல்த்தான மிக்ஸ்’ பயன்படும் வண்ணம் விளக்கியிருந்தீர்கள். தேவையான பொருட்கள், செய்முறை, எல்லாமே அபாரம்! - சிம்மவாஹினி, வியாசர் நகர்.

* ஜனவரி 1-15 இதழின் அட்டைப்படம் சுற்றுப்புறச்சூழல் சிறப்பிதழில், மாசு எவ்வாறு நம்மைச் சூழ்கிறது என்பது, பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் அட்டைப்படம் அமைந்திருந்தது பாராட்டத்தக்கது. ‘ஃப்ரெண்ட்ஷிப்பிலேயே இதுதான் பெஸ்ட்’ என்ற தகவல் மகிழ்வைத் தந்தது. வகுப்பறை நட்பு என்றால் சும்மாவா?! - சு.இலக்குமணசுவாமி, மதுரை.

* குங்குமம் டாக்டர் வழங்கியுள்ள ‘சுற்றுச்சூழல் சிறப்பிதழ்’ கற்றுத் தந்தவை ஏராளம். இனி பருவமழையே கிடையாது. புயல் மழைதான் என்ற தகவல் அதிர்ச்சியைத் தந்தது. எல்லோரும் அவரவர் பங்குக்கு ஏதேனும் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.  - வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

* சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஏற்படக்கூடிய நோய்நொடிகள், அவற்றைக் குணப்படுத்துவதற்கான, மருத்துவ ஆலோசனைகளை வாரி வழங்கி இருந்த பொது மருத்துவர் டாக்டர் ஜெயசித்ராவுக்கும், விவசாய உற்பத்திக்கான ஆலோசனைகளைக் கூறி இருந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவர் இந்திரா தேவி ஆகியோருக்கும் நன்றிகள் பல!
- இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.       

* குழந்தைகளுக்கு ஏற்படுகிற முதுகு வலி பற்றி, எலும்பு மருத்துவர் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தது பெற்றோரும், ஆசிரியரும் கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கையாக இருந்தது. - சி.கோபாலகிருஷ்ணன், கிழக்கு தாம்பரம்.