டியர் டாக்டர்




மருத்துவ செய்திகளை சாமன்யர்களுக்கும் கொண்டு சேர்க்கும் குங்குமம் டாக்டர் மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்!
- எஸ். மணிகண்டன், பெருந்துறை, என்.வெங்கட், சத்தியமங்கலம்.

நேர்மறையான பல நல்ல விஷயங்களோடு வந்த நான்காம் ஆண்டு சிறப்பிதழ் மிக அருமை. ஆசிரியரின் கடிதம் நெஞ்சைத் தொட்டது. அனஸ்தீஷியா பற்றிய ஒரு மருத்துவரின் டைரிக்குறிப்பின் மூலம் பல ரகசியங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. மருத்துவ மணம் கமழும் வெற்றிலை ரசமும் சூப்பர்!
- சுகந்தி நாராயண், வியாசர் காலனி.

‘பல் கூச்சம் முதல் வாய்புற்று நோய்’ வரையிலான மருத்துவ விளக்கங்கள், பல் பராமரிப்புக்கு வழிகாட்டியாக இருந்தன. எல்லோருக்கும் பயனுள்ள ஒரு கட்டுரை.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

பெண்களைத் தாக்கும் புற்றுநோயின் அறிகுறிகள் பற்றி டாக்டர் ஜெயராணி விளக்கி இருந்தது விழிப்புணர்வு
ஊட்டுவதாக இருந்தது. கட்டுரைக்குத் தொடர்பான படங்களிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறீர்கள் என்பது ஒவ்வொரு பக்கத்திலும் புரிந்துகொள்ள முடிகிறது. சபாஷ் !
- ஆர். மனோபிரபாகரன், பேரணாம்பட்டு.

கண் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் தந்த ‘விழியே கதை எழுது’ தற்போது நிறைவுற்றது சற்று ஏமாற்றம்தான். தொடரை சிறப்பாக எழுதிய விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம் அவர்களுக்கும், குங்குமம் டாக்டருக்கும் நன்றிகள் பல.
- சி. கோபாலகிருஷ்ணன், மேற்கு தாம்பரம். 

‘வாரத்துக்கு மூன்று முட்டை’ ரசித்து வாசிக்க வைத்தது. முட்டையில் இருக்கும் ஊட்டசத்துக்களை விலாவாரியாகப் பட்டியலிட்டு அசத்திவிட்டார் டயட்டீஷியன் வித்யா. இனி எங்கள் சமையலிலும் முட்டை கண்டிப்பாக இடம் பெறும்.
- ஜெய்சங்கர், மூவரசன் பேட்டை.

கழற்சிக்காய் பற்றிய செய்திகளும், அதன் மருத்துவ குணங்களும் வியக்க வைத்தது. தெருவோரங்களில் எளிதாக காணக்கிடைக்கும் செடிகளிலும், கொடிகளிலும்தான் எத்தனை பெருமைகள் அடங்கியிருக்கிறது?! நாம்தான் அதன் மகத்துவம் புரியாத அப்பாவிகளாக இருக்கிறோம்.
- ச. ராஜசேகரன், கிண்டி

அட்டைப்படம்: ஏ.டி.தமிழ்வாணன்