டியர் டாக்டர்




அலுவலகம் சார்ந்த பணிகளில் ஓடிக்கொண்டிருக்கும் பலருக்கும் உதவும் வகையில் முழுமையாக, நிறைவாக இருந்தது 10 to 6 ஹெல்த் கவர் ஸ்டோரி. வாட்ஸ் அப்பை அதீதமாகப் பயன்படுத்துவதால் வரும் வாட்ஸப்பைட்டிஸ் பிரச்னையும் சரியான நேரத்தில் வந்திருக்கும், சரியான எச்சரிக்கை. மன அழுத்தம் நீங்க நீங்கள் சொல்லிக் கொடுத்த மூணே மூணு வார்த்தையும் பலே டெக்னிக்தான் !
- சுகந்தி நாராயணன், வியாசர் நகர்.

வீகன் டயட்டில் பால் உணவு பொருளுக்குப் பதிலாக தேங்காய் பால், பாதாம் பால், எள்ளுப்பால் போன்றவற்றை மிக எளிதாக தயார் செய்து பயன்படுத்தலாம் என்கிற யோசனை அடடே!
- ரா.ராஜதுரை, சீர்காழி

வலிப்பு நோயாளிகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு ஆலோசனை சொல்லவும், வழிநடத்தவும் ஆதரவு குழு இருப்பது பற்றி செய்தி வெளியிட்ட குங்குமம் டாக்டருக்கு நன்றி!
-  ந.கலைவாணன், ராசிபுரம்,

மூட்டுவலி எல்லாம் முன்பு வயதானவர்களுக்கு வருகிற பிரச்னையாக இருந்தது. இப்போது இளம்பெண்களையும் விட்டுவைக்காதது காலக் கொடுமை.
- எஸ். வரலஷ்மி நிரஞ்சனா, பேரணாம்பட்டு.

மார்ச்-8 நோ ஸ்மோக்கிங் டே தினத்தினை நினைவுபடுத்தும்விதமாக, சிகரெட்டை நிறுத்த உளவியல் ரீதியாக 10 வழிகளைக் கொடுத்திருந்ததும், மார்ச் 9 உலக சிறுநீரக தினத்தையொட்டி சிறுநீரகம் பற்றிய அடிப்படை விஷயங்களை எளிமையாக தொகுத்திருந்த தகவல்களும் இரண்டு பெரிய முக்கிய நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி இருந்தன.
- இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

நாம் மதிக்காத பழைய சோற்றில் இத்தனை மருத்துவரீதியான குணங்கள் இருப்பது பற்றி படித்ததும் அசந்துபோனேன். பழைய சோறு மேலும், அதைக் கொண்டாடிய நம் முன்னோர்கள் மீதும் பெரிய மரியாதை வந்துவிட்டது.
 - பா. ஞான பாரதி, செம்பாக்கம்