டியர் டாக்டர்




உணவு அரசியல் பற்றிய கவர் ஸ்டோரியின் மூலம் இயற்கை உணவுகளுக்குத் திரும்ப வேண்டிய அவசியத்தை எல்லோருக்கும் அழுத்தமாகப் புரிய வைத்துவிட்டீர்கள்... சபாஷ்!

- பூங்கொடி பழனிச்சாமி, சேலம் நடைபயிற்சியின் பலன்களை கவித்துவமாக விளக்கியிருந்தது அதன் மீதான மரியாதையை இன்னும் அதிகப்படுத்திவிட்டது!
- பாப்பாக்குடி இரா. செல்வமணி, திருநெல்வேலி

வீகன் டயட்டை இந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமணர்கள் பின்பற்றி இருக்கிறார்கள் என்ற செய்தி பெருமிதமாக இருந்தது.
- ரா. ராஜதுரை, சீர்காழி

ஜப்பானீஸ் காய்ச்சல் பற்றிய கட்டுரை சரியான எச்சரிக்கை மணியாக அரசாங்கமும், பொதுமக்களும் உணர்ந்து தற்காத்துக் கொண்டால் நல்லது.
- சுகந்தி நாராயண், வியாசர்பாடி.

டீயில் இத்தனை வகையா? அதிலும் எளிமையாக வீட்டிலேயே செய்துகொள்ளும் வகையிலான ஹெல்த்தியான டீ பற்றிய குறிப்புகளைப் படித்து வியந்து போனேன்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி

நல்ல தகவல்களைத் தேடித்தேடி நீங்கள் தருவதிலேயே வாசகர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறையைப் புரிந்துகொள்ள முடிகிறது. கோடானு கோடி நன்றிகள்.
- இல. வள்ளிமயில், திருநகர்.

‘உன் மேல ஒரு கண்ணு...’ என்ற சைட் சைக்காலஜி கட்டுரையையும், ‘லவ் பண்ணலாமா... வேணாமா..’ என்ற காதல் குழப்ப கட்டுரையையும் ‘காதலர் தின ஸ்பெஷல்’ என்று கூறலாம்தானே?!
- வெ. லட்சுமிநாராயணன், வடலூர்.

பொதுமக்களிடம் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கி வரும் சேவையை சிறப்பாக செய்து வருகிறது குங்குமம் டாக்டர். மனமார்ந்த பாராட்டுகள்!
- ஆர். மனோபிரபாகரன், குடியாத்தம்