சுயசார்பு இந்தியா திட்டத்தில் கல்விக்கான அறிவிப்பு!



* செய்தித் தொகுப்பு

தற்சார்பு இந்தியா கோட்பாட்டின் கீழ் மத்திய நிதி அமைச்சர் 5 கட்ட அறிவிப்புகளாக ரிசர்வ் வங்கி அளித்துள்ள சலுகை ஏழைகளுக்கான நலத்திட்ட உதவி என மொத்த மதிப்பு ரூ.20 லட்சத்து 97 ஆயிரத்து 053 கோடி பொருளாதார நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டது. இதில் ஐந்தாம் கட்ட பொருளாதார நடவடிக்கையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மருத்துவம், கல்வி, பொதுத்துறை நிறுவனங்கள், வணிகம் பொதுத்துறை நிறுவனங்கள், கொரோனா காலத்தில் வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏழு அறிவிப்புகள் வெளியாகின.



கல்வித்துறையில் அறிவித்த
முக்கிய அறிவிப்புகள்
* PM eVIDYA- பல முனை அணுகுதல் வசதி கொண்ட டிஜிட்டல்/ ஆன்லைன் கல்வித் திட்டம் உடனே தொடங்கப்படும் .இந்தத் திட்டத்தின் கீழ் 1 முதல் 12-ஆம் வகுப்புவரை தனித்தனியாக 12 டிவி சேனல்கள் அறிமுகப்படுத்தப்படும் (ஒரே நாடு ஒரே சேனல் திட்டம் ).
* செவித்திறன் & பார்வைத்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மின்- பாடங்கள் (இ-புக்) உருவாக்கப்படும்.
* உயர்நிலை வரிசையில் முதல் 100 இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் (மே 30,2020 தேதியிலிருந்து) ஆன்லைன் படிப்புகளைத் தொடங்க தானாக அனுமதிப்படும். ஏர்டெல், டாட்டா ஸ்கை போன்ற டிடிஎச் நிறுவனங்கள் தினமும் 4 மணிநேரம் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.
* 2025-க்குள் கிரேடு 5 முடிக்கும் மாணவர்கள் உரிய கற்றலைப் பெறுவதை உறுதிசெய்ய தேசிய அடிப்படை நிலை எழுத்தறிவு மற்றும் என்னறிவு லட்சிய நோக்குத் திட்டம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தொடங்கப்படும்.