வேலை ரெடி!வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு  அறிவிப்புகள் இங்கே...

தரக்கட்டுப்பாட்டுத்துறையில் வேலை

நிறுவனம்: மத்திய அரசின் பீரோ ஆஃப் இண்டியன் ஸ்டேண்டர்ட்ஸ் எனும் தரக்கட்டுப்பாட்டுத் துறை
வேலை: சயிண்டிஸ்ட் ‘பி’ எனும் பதவியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங், மெட்டலர்ஜிக்கல் எஞ்சினியரிங், சிவில் எஞ்சினியரிங் உட்பட பல்வேறு தொழில்நுட்பப் பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 150
கல்வித் தகுதி: எஞ்சினியரிங் அல்லது டெக்னாலஜியில் டிகிரி
வயது வரம்பு: 30-க்குள்
தேர்வு முறை: கேட் தேர்ச்சி மற்றும் நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.3.2020
மேலதிக தகவல்களுக்கு: https://bis.gov.in

நிலக்கரி சுரங்கத்துறையில் வேலை

நிறுவனம்: மத்திய அரசு நிறுவனமான நார்த்தன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் எனும் நிலக்கரி சுரங்கத் துறையில் வேலை
வேலை: மைனிங் சர்தார் மற்றும் சர்வேயர் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 95. இதில் மைனிங் சர்தாரில் 88 மற்றும் சர்வேயர் வேலையில் 7 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: முதல் வேலைக்கு 10வது படிப்புடன் மைனிங் வேலையில் சான்றிதழ் படிப்பு, கேஸ் டெஸ்டிங் தேர்ச்சி மற்றும் ஃபர்ஸ்ட் எயிட் தேர்ச்சி. இரண்டாவது வேலைக்கு 10வது படிப்புடன்
சர்வேயர் வேலையில் சான்றிதழ் படிப்பு மற்றும் சி.எம்.ஆர் சான்றிதழ்
வயது வரம்பு: 18 முதல் 30 வரை
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24.3.2020
மேலதிக தகவல்களுக்கு: www.nclcil.in

பிளாஸ்டிக் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை

நிறுவனம்: சிப்பெட் எனப்படும் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக் அண்ட் டெக்னாலஜி நிறுவன சென்னைக் கிளையில் வேலை
வேலை: லெக்சரர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ஃபேகுலிட்டி உட்பட பல்வேறு துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 241. இதில் லெக்சரர் 46, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 90, லைப்ரேரியன் 8, ப்ளேஸ்மென்ட் ரிலேஷன் ஆபிசர் 7, அசிஸ்டென்ட் ப்ளேஸ்மென்ட் ஆபிசர் 10, ஃபேகுலிட்டி 50, லேப் இன்ஸ்ட்ரக்டர் 18 மற்றும் பிசிக்கல் டிரெயினர் 12 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., எம்.பி.ஏ டிப்ளமோ, ஐ.டி.ஐ, டிகிரி மற்றும் முதுகலைப் படிப்பு ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இதில் பொருத்தமான வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: லெக்சரர், ஃபேகுலிட்டிக்கு
65-க்குள்ளும், ப்ளேச்மென்ட் ஆபிசர் பணிக்கு 45-க்குள்ளும் மற்ற வேலைகளுக்கு 35-க்குள்ளும் இருத்தல் வேண்டும்
தேர்வு முறை: எழுத்து, திறன் தேர்வு மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.3.2020
மேலதிக தகவல்களுக்கு: www.cipet.gov.in

எய்ம்ஸ் மருத்துவ ஆய்வு மையத்தில் பேராசிரியர் பணி!

நிறுவனம்: AIIMS என்று சுருக்கமாக அழைக்கப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆய்வு மையத்தின் ரிஷிகேஷ் கிளையில்
வேலை: பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணி, பயோகெமிஸ்ட்ரி, பிஸியாலஜி, அனாட்டமி, பார்மகாலஜி, கம்யூனிட்டி மெட், பார்ம் மெட், போரன்சிக் மெட், டாக்சிகாலஜி, மைக்ரோ பயாலஜி, சைக்கியாட்ரி, பேதாலஜி, அனஸ்திசியாலஜி, ஜென் மெடிசின், பீடியாட்ரிக்ஸ், ஆர்தோபெடிக்ஸ், இ.என்.டி., ஜெனரல் சர்ஜரி உள்ளிட்ட மருத்துவப் பிரிவில் பணியிடங்கள் உள்ளன
காலியிடங்கள்: மொத்தம் 164
கல்வித் தகுதி: இந்த பணியிடங்கள் சார்ந்த முதுநிலை மருத்துவப் படிப்புகள், முனைவர் ஆராய்ச்சிப் படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அது பற்றிய விவரங்களை முழுமையான அறிவிப்பை இணையதளத்தில் பார்க்கலாம்.
தேர்வு முறை: கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 7.4.2020
மேலதிக தகவல்களுக்கு: www.aiimsrishikesh.edu.in

பட்டதாரிகளுக்கு கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணி

நிறுவனம்: காஞ்சிபுரம் சென்ட்ரல் கோவாபரேட்டிவ் பேங்க் எனும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை
வேலை: ஆபிஸ் அசிஸ்டென்ட் எனும் உதவியாளர் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 246
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
வயது வரம்பு: 18 முதல் 30 வரை
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.3.2020
மேலதிக தகவல்களுக்கு: www.kpmdrb.in

இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் வேலை!

நிறுவனம்: இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனப் பணிக்கான ஆட்களைத் தேர்வு செய்ய SSC என்று சொல்லப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வு மையம் அறிவித்துள்ளது
வேலை: ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், லைப்ரரி அண்ட் இன்ஃபர்மேஷன் அசிஸ்டென்ட், ஜூனியர் ஜுவாலஜிக்கல் அசிஸ்டெண்ட், கேள் கேடட் இன்ஸ்ட்ரக்டர், சீனியர் ஜுவாலஜிக்கல் அசிஸ்டென்ட், டெக்னிக்கல் ஆபிசர், லெபாரட்டரி அசிஸ்டென்ட், சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், லைப்ரரி கிளர்க் உள்ளிட்ட பல்வேறு பணிகள்
காலியிடங்கள்: மொத்தம் 225
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு, +2, பட்டம் முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்
வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வயதுவரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்புத் தளர்வு வழங்கப்படும்
தேர்வு முறை: கணினி அடிப்படைத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார் கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.3.2020
மேலதிக தகவல்களுக்கு: www.ssc.nic.in

தொகுப்பு: டி.ரஞ்சித்