ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ரயில்வேயில் அப்ரண்டிஸ் பயிற்சி!சத்திஸ்கரின் பிலாஸ்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தென்கிழக்கு மத்திய ரயில்வேயானது (SECR) நாட்டின் பதினெட்டு  ரயில்வே மண்டலங்களில் ஒன்றாகும். அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது. அதன்படி இவ்வாண்டும் தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட  உள்ளது.

காலியிடங்கள்: ஸ்டெனோகிராபர், ஃபிட்டர், எலக்ட்ரீசியன், வயர்மேன், வெல்டர், பிளம்பர் என மொத்தம் பதினாறு தொழிற்பிரிவுகளின் கீழ் சுமார் 432  காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தேர்ந்தெடுக்க விரும்பும் தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருத்தல்  வேண்டும்.
வயது வரம்பு: பொதுப்பிரிவு  மாணவர்கள் 1.7.2019 அன்றின்படி 15 முதல் 24 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

எஸ்.சி / எஸ்.டி மாணவர்களுக்கு ஐந்து  வருடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மூன்று வருடங்களும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுசரிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.apprenticeship.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில்  விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 15.7.2019.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: பத்தாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ-யில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.secr.indianrailways.gov.in என்ற இணையதளத்தைப்  பார்க்கவும்.