தொழில்நுட்பப்பட்டயப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை!



* அட்மிஷன்

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் (MSME- Micro Small and Medium Enterprises) நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கிவருகிறது Central Institiute of Tool Design (CITD)எனும் தொழில்நுட்பப் பயிற்சி கல்விநிறுவனம். இது 1968ம் ஆண்டு ஐதராபாத்தில் அமைக்கப்பட்டது. இதன் கிளை வளாகங்கள் சென்னை மற்றும் விஜயவாடாவில் உள்ளன.

இக்கல்விநிறுவனம் இந்தியாவின் பாரம்பரிய உயர்கல்வி நிறுவனங்களுள் ஒன்று. Tool Design and Manufacturing, CAD, CAM, Electronics, Mechatronics மற்றும் Robotics போன்ற பல துறைகளைச் சார்ந்த பல்வேறு டிப்ளமோ, முதுகலை மற்றும் சான்றிதழ் படிப்புகளை சர்வதேச தரத்தில் வழங்கிவருகிறது இக்கல்விநிறுவனம். 2019ம் கல்வியாண்டிற்கான பல்வேறு டிப்ளமோ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

வழங்கப்படும் படிப்புகள்:
நான்கு வருட கால அளவு கொண்ட Diploma in Tool, Die & Mould Making (DTDM), மூன்று வருட கால அளவிலான Diploma in Electronics and Communication Engineering (DECE), Diploma in Automation & Robotics Engineering (DARE) மற்றும் Diploma in Production Engineering (DPE) போன்ற நான்கு டிப்ளமோ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

கல்வித் தகுதி: விருப்பமுள்ள மாணவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் 50% மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். எஸ்.சி / எஸ்.டி மாணவர்கள் 45% மதிப்பெண்கள் பெற்றிருப்பது போதுமானது.

வயதுவரம்பு:
விண்ணப்பிக்க விரும்புவோர் 1.4.2019 அன்றின்படி 15 வயதிற்கு குறையாமலும் 19 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு வயது வரம்பில் ஐந்து வருட தளர்வு அனுசரிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.citdindia.org என்ற இணையதளம் சென்று விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து முழுமையாக பூர்த்தி செய்து தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினர் ரூ.700, எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் ரூ.350 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். The Director, Central Institiute of Tool Design , Balanagar, Hydrabad- 500 037 என்ற முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் :
27.4. 2019.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: கல்வி

நிறுவனத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மேலும் விவரங்களுக்கு www.citdindia.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- துருவா