அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா?



ஸ்போக்கன் இங்க்லிஷ்  பேச்சு 4 (சொற்கள்)

 மொழி

‘‘ஆங்கிலம் அந்நிய மொழியாச்சே?’’ என்று ப்ரவீணா கேள்வி எழுப்பியதை கேட்டதும்,“Sure sir. Now I understand and accept that Grammar is not at all needed to speak any language. But Tamil is our mother tongue. People around us are Tamilians. So we are able to communicate to them. But English is not our mother tongue. Let us forget Grammar as you said but how about ‘vocabulary’? Without knowing the words, meanings and usage, how can we speak sir?” asked Ravi. உடனே, ‘‘Excellent Ravi. I admire your questioning. Well…. நாம ஆங்கிலத்தில் பேச வேண்டுமென்றால், நம்மைச் சுற்றி இருப்பவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பேசத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். தப்பித் தவறி கூட தமிழ் தெரிந்திருக்கக்கூடாது. அப்டின்னா நாம லண்டன்லயோ அல்லது நியூயார்க்லயோதான் இருக்கணும். அதற்கு வாய்ப்பு கிடையாது. இரண்டாவதாக நல்லதொரு ஆங்கிலப் பள்ளியில் படித்திருக்க வேண்டும். அதற்கும் வாய்ப்பு இல்லை அப்படித்தானே?‘‘ என்றார் ரகு.

“Generally, a language can be developed through the skill set of LSRW. Listening. Speaking, Reading and Writing. The first two skills, viz. Listening and Speaking help to develop the so called Communicative or Spoken English, whereas the last two viz. Reading and Writing help to develop Written English. இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலைகளில் நம்மை உயர்த்திக்கொள்ள உதவுவது இரண்டே இரண்டு திறமைகள் தான். ஒன்று கவனித்தல். இரண்டு பேசுதல். The skills of LISTENING AND SPEAKING are the only option that can rescue you from this critical juncture. 1) நாம பேசினா யாரும் நம் தப்பைக் கண்டுபிடிக்கக்கூடாது. 2) அப்படியே தவறைக் கண்டுபிடித்தாலும், கிண்டலடிக்கக்கூடாது. 3) நம்முடைய கேவலமான மொழிப் புலமையைக் கண்டு நம்மை விட்டுப் பிரிந்து செல்லக்கூடாது. 4) முக்கியமா… ஆங்கிலத்தை தவிர நம் மொழியில் அவர்கள் பேசக்கூடாது. இந்த மாதிரியான நான்கு கண்டிஷன்களையும் ஏத்துக்கறவங்க யாராவது இருக்காங்களா சொல்லுங்க பார்க்கலாம்” என்றார் ரகு.

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட ப்ரவீணாவும் ரவியும் சற்று யோசித்து யோசித்து ‘‘அப்படி யாரும்  இல்லை’’ என்ற பதிலையே சொன்னார்கள். ‘‘இருக்காங்க… ஒரே ஒருத்தர் இருக்காங்க. அவர் பேர் என்னென்னா…..? வீட்டுக்கு போக நேரமாயிடுச்சு… நாளை வந்து அது யாருன்னு சொல்றேன்” என்றபடியே  எழுந்தார் ரகு.                                                 
(விவாதம் தொடரும்)

ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com

சேலம் ப.சுந்தர்ராஜ்