அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா?மொழி

ஸ்போக்கன் இங்க்லிஷ் பேச்சு 3 (இலக்கணம் தேவையா?)

பெருமூச்சு விட்டபடியே ரகுவைப் பார்த்த ரவி, ‘‘அதெல்லாம் சரிங்க சார். பேசும்போதே இந்த இடத்தில do போடணுமா? does போடணுமா? have போடணுமா? has போடணுமா? I did not go-ன்னு எழுதணுமா? அல்லது I did not went -ன்னு எழுதணுமா? இந்த மாதிரி குழப்பங்களைத் தீர்ப்பது இலக்கணம்தானே?” “அற்புதமான கேள்வி ரவி. திரும்பத் திரும்பச் சொல்றேன். பேசுவதற்கு இலக்கணம் தேவையில்லை. இப்ப நீ காபி குடிக்கணும்னு நினைக்கிற. என்ன பண்ணுவ?”என்று கேட்ட ரகுவிடம் “ரொம்ப சிம்பிள் சார். I’ll go to our canteen and have a coffee” என்றான் ரவி.

உடனே ரகு, ”Very good. This is the reply that I expected. It is easier to go to canteen and have a coffee. Instead, will you go to a coffee estate, buy coffee beans, bake it and brew it and then will you drink coffee?.... காபி வேணும்னா கடைல வாங்கி குடிக்கறத விட்டுட்டு காபி எஸ்டேட்டுக்கே போய் காபி கொட்டையை வாங்கி, காய வச்சு, வறுத்து பொடி பண்ணி ….. எது ஈசி?” என்று கேட்டதும் “Obviously, the canteen one is easier. That’s what even I will do sir” என்றாள் அகிலா.

‘‘குட். அதனால… என்ன தெரியலயோ அத மட்டும் தெரிஞ்சிகிட்டா போதும். “இஸ்”போடணுமா? “வாஸ்”போடணுமா? கேட்டு தெரிஞ்சுக்கணும். அத விட்டுட்டு ரென் அண்டு மார்டின் இலக்கண அகராதியை வச்சுக்கிட்டு போராடிக்கிட்டு இருக்கக்கூடாது. இதையே காரணமா வச்சுக்கிட்டு “எனக்கு இலக்கணம் தெரியல. அதனால எனக்கு பேச வராது-ன்னு தவறா நினைக்கக்கூடாது.

எங்க அப்பாவும் அம்மாவும் இரண்டாம் வகுப்பைக்கூட தாண்டாதவங்க. கையெழுத்து மட்டும் போடத் தெரிஞ்சவங்க. என் தலைமுறையைச் சேர்ந்த பெற்றோர்கள் அநேகமா பள்ளி சென்றிருக்க வாய்ப்பில்லை. ஆனா அவங்க, உங்கள மாதிரியெல்லாம் ‘எங்களுக்கு இலக்கணம் தெரியாது. அதனால பேச முடியாது’ என்று சொல்வதில்லை. சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம். இல்லையா?” என்றார் ரகு.

‘‘நீங்க சொல்றது வாஸ்தவம்தான் சார். எங்கப்பாவோட கிராமத்தில பள்ளிக்கூடமே கிடையாதாம். அதனால அவரு பள்ளிக்கூடம் எல்லாம் போனதே இல்லையாம். ஆனா ரொம்ப அழகாவும் ஆணித்தரமாகவும் பேசுவார்.

புரியுது. இப்ப புரியுது. பேசறதுக்கு இலக்கணம் தேவையில்லை-ன்னு இப்ப புரியுது” என்ற ப்ரவீணா, ‘‘ஆனா, தமிழ் தாய்மொழி. படிக்கவில்லை என்றாலும் பேச முடியும். சுத்தி இருக்கறவங்க எல்லாரும் பேசினாங்க.அதனால பேச முடிஞ்சது. ஆனா ஆங்கிலம் அந்நியமொழி. அத எப்படி பேசறதாம்?” என்ற துணைக் கேள்வியை எழுப்பினாள்.

(விவாதம் தொடரும்)

சேலம் ப.சுந்தர்ராஜ்