அடடே ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!



மொழி

Prefer than VS Prefer to

அலுவலக கேன்டீனில் வடையின் வாசனை நாசியைக் கிள்ளியது. ‘‘I like two masal vadais” என்ற அகிலாவைப் பார்த்த ரவி,“ I  want Ulundhu vadai” என்றான். பின் ரகுவிடம், “What about you sir?” என்றான். அதற்கு ரகு, “I don’t have any  specific likes and wishes. Anything which would not trouble my intestine, will do” என்றார் ரகு. ‘‘I  always like masal vadai than ulundhu vadai”என்ற அகிலாவிடம், “I prefer ulundu vadai than masal  vadai.” என்றான் ரவி.  

உடனே ரகு,“I prefer ulundu vadai to masal vadai என்றுதான் சொல்ல வேண்டும்.  ‘prefer’ என்ற வார்த்தையை நீ  உபயோகப்படுத்தினால் அதற்கு than வராது. அதற்குப் பதிலாக to தான் வரும்” என்றார்.அதற்கு ரவி,“எனக்கு மெதுவடையை விட மசால்  வடைதான் பிடிக்கும். ‘விட’ என்பதற்கு than என்றுதானே சொல்வார்கள் சார்!” என்றான். “ஆமாம் ரவி. ஆனா சில வினைச்சொற்களுக்கு அது  பொருந்தாது. உதாரணத்துக்கு, refer, prefer, junior, senior, interior, superior என்பவைகளுக்கு than என்ற  preposition விட to என்ற prepositionதான் சரிவரும். அதாவது,

1. I prefer coffee to tea. (டீ-யை விட எனக்கு காபிதான் பிடிக்கும்) 2. She is junior to me. (பதவியில் அவள்  என்னை  விட இளையவள்) 3. He is senior to you. (பதவியில் அவர் உன்னைவிட மூத்தவர்.  4. Modern music is always  considered inferior to that of the past. (அந்தக் காலத்து இசையை விட, இக்காலத்து இசை தரம் குறைந்ததாகவே  கருதப்படுகிறது.) 5. This model is technically superior to its competitors. (இந்த மாடல் மற்றப் போட்டியாளர்களை  விட உயர்தரமானது.

அதைப் போலவே refer என்று வந்தாலும் to தான் வரும். நான் யாரைச் சொல்கிறேன் என்று புரிகிறதா?(You know who I refer to?)  தயவு செய்து அகராதியைப் பார். (Please refer to a dictionary) சுந்தர்தான் அந்த டாக்டரை எனக்குக் காட்டினார் அல்லது சிபாரிசு  செய்தார். ( Sundar referred me to that doctor.) என்ற ரகுவிடம் “Thankyou very much sir. Let us be  careful” என்றபடியே எழுந்தனர். ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com

- சேலம் ப.சுந்தர்ராஜ்