அடடே...ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!



மொழி

DEGREES OF COMPARISON  PART THREE


அலுவலகப் பணியில் ஆழ்ந்திருந்த ரவியின் அருகே வந்தமர்ந்த ரகு, ‘‘சென்ற முறை முதல் மாடல் English is easier than Tamil (Comparative degree) and its positive degree is ‘ Tamil is not as easy as English’ என்றும், இரண்டாவது மாடலான Gopi is the tallest man in the office.  Gopi is taller than any other man in the office.  No other man is as tall as Gopi என்றும் பார்த்தோம் இல்லையா? இன்று கடைசி மாடலான  மூன்றாவது மாடல் ONE among MANY PEER model பார்க்கலாம்.’’

வேலையை நிறுத்திவிட்டு ரகுவின் பக்கம் திரும்பிய ரவியிடம், ‘‘PEER என்றால் ‘சமம்’என்று பொருள். அதாவது, நமது அலுவலக ஆட்களில்  அதிகபட்சமான ஐந்தடி ஐந்தங்குல உயரத்தில் சுமார் பத்து பேர் உள்ளனர். இந்த பத்து பேரில் அகிலாவும் ஒருத்தி. இந்த சூழ்நிலையை ஒப்புமைப்படுத்தினால் Akila is one of the tallest ladies in the office.

(Superlative degree) மிகவும் உயரமான பெண்களில் அகிலாவும் ஒருத்தி என்றும், Akila is taller than many other ladies in the office. (Comparative Degree) பல பெண்களை விட அகிலா உயரமானவள் என்றும் Very few ladies are as tall as Akila. (Positive Degree) ஒரு சில பெண்களே அகிலா அளவுக்கு உயரமாய் இருக்கிறார்கள். என்றும் வரும்’’ என்றார்.

‘‘Let me recapitulate now Ravi. மீண்டும் சுருக்கமாகச் சொல்கிறேன்.
Model 1  (One of the two)
Dhoni is better than Dinesh (CD) and  Dinesh is not as good as Dhoni.
Model 2  (ONLY TOP IN THE GROUP)
Arun is the cleverest boy in the class. (SD)  Arun is cleverer than any other boy in the class.(CD)  No other boy is as clever as Arun. (PD)
Model 3  (ONE AMONG PEER IN THE GROUP)
Prathap is one of the most intelligent boys in the class. (SD)  Prathap is more intelligent than many other boys in the class (CD)  Very few boys are as intelligent as Prathap. புரியுதா ரவி? அடுத்த முறை நான் ஒரு டெஸ்ட் வைக்கப் போறேன். ரெடியா இரு” என்றவாறே ரகு எழுந்து தன் இருக்கை நோக்கிச் சென்றார்.

ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com

சேலம் ப.சுந்தர்ராஜ்