வேலை ரெடி!



வாய்ப்புகள்

எஞ்சினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் வேலை!

நிறுவனம்: மத்திய அரசு நிறுவனமான எஞ்சினியர்ஸ் இந்தியா லிமிடெட்
வேலை: எஞ்சினியர், மேனேஜர் உட்பட 4 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 141. இதில் எஞ்சினியர்/ஆபிசர் 59, டெப்யூட்டி மேனேஜர் 71, டெப்யூட்டி ஜெனரல் மேனேஜர் 1 மற்றும் ஜூனியர் அக்கவுன்டன்ட் 10 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., பி.எஸ்சி. மற்றும் டிப்ளமோ படிப்புகளை வேலைப் பிரிவுகள் தொடர்பாக படித்து தேர்ச்சியுற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டு
வயது வரம்பு: 28 முதல் 47 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.6.18
மேலதிக தகவல்களுக்கு: www.engineersindia.com

எய்ம்ஸ் மருத்துவமனையில் சீனியர் ரெசிடெண்ட் பணி!

நிறுவனம்: எய்ம்ஸ் என்றழைக்கப்படும் மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கான நிறுவனத்தின் ஜோத்பூர் கிளையில் வேலை
வேலை: சீனியர் ரெசிடெண்ட் பதவியிலான மருத்துவர் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 127
கல்வித் தகுதி: எம்.டி., டி.என்.பி.,
எம்.டி.எஸ்., டி.எம். போன்ற மருத்துவத் துறை சார்ந்த படிப்புகளில் தேர்ச்சி
வயது வரம்பு: 37க்குள்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.6.18
மேலதிக தகவல்களுக்கு: www.aiimsjodhpur.edu.in

ஆவின் பால் நிறுவனத்தில் ஜூனியர் எக்சிகியூட்டிவ் பணி!

நிறுவனம்: தமிழ்நாடு அரசின் பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தில் வேலை
வேலை: ஜூனியர் எக்சிகியூட்டிவ்
காலியிடங்கள்: மொத்தம் 75
கல்வித் தகுதி: டிகிரி படிப்புடன் கூட்டுறவு தொடர்பான பயிற்சிகளில் தேர்ச்சி அல்லது அனுபவம்
வயது வரம்பு: 18 - 30
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.6.18
மேலதிக தகவல்களுக்கு: www.aavinmilk.com

கொங்கன் ரயில்வேயில் வேலை!

நிறுவனம்: இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளை இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டது கொங்கன் ரயில்வே.
வேலை: டிராக்மேன், ஏ.பி.மேன் உள்ளிட்ட பல பிரிவுகளில்
காலியிடங்கள்: மொத்தம் 100. டிராக்மேன் பிரிவில் 50 இடங்களும், ஏ.பி.மேன் பிரிவில் 37 , எலக்ட்ரிக்கல் கலாசி பிரிவில் 2, எஸ் அண்ட் டி. கலாசி பிரிவில் 8, மெக்கானிக்கல் - கலாசி பிரிவில் 3.
கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 31
தேர்வு முறை: கம்ப்யூட்டர் வாயிலான தேர்வு மூலமாக தேர்ச்சி செய்யப்படுவார்கள்.
வின்ணப்பிக்க கடைசித் தேதி: 21.6.2018
மேலதிக தகவல்களுக்கு: www.konkanrailway.com

தமிழக அரசில் ப்ராஜக் அசிஸ்டென்ட் பணி!

நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி- யின் ஐ.சி.டி.எஸ் எனப்படும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத் துறைகளில் வேலை
வேலை: பிளாக் கோவார்டினேட்டர், ப்ராஜக்ட் அசிஸ்டென்ட் உட்பட 13 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 149. இதில் பிளாக் கோவார்டினேட்டர் மற்றும் ப்ராஜக்ட் அசிஸ்டென்ட் துறைகள் ஒவ்வொன்றிலும் மட்டுமே அதிகபட்சமாக 64 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு, +2, இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டதாரிகளுக்கு இந்த வேலைகளில் ஒன்று கிடைக்கலாம்
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.6.18
மேலதிக தகவல்களுக்கு: www.icds.tn.nic.in

தொகுப்பு: டி.ரஞ்சித்