வேலை ரெடி!வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

மத்திய அரசுப் பணிகளுக்கான வாய்ப்பு!

நிறுவனம்: மத்திய அரசுப் பணிகளை வழங்கும் எஸ்.எஸ்.சி யின் வேலைவாய்ப்பு அறிவிப்பு
வேலை: கிரேட் A,B,C,D எனும் பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் பல்வேறு வேலைகள்
காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை
கல்வித் தகுதி:  வேலைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட துறைகளில் பட்டப்படிப்பு
வயது வரம்பு: ஒவ்வொரு வேலைக்கும் வயது வரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது. 18 வயதிலிருந்து 32 வரை துறைகளுக்கு ஏற்ப இருக்கலாம்
தேர்வு முறை: எழுத்து மற்றும் கம்ப்யூட்டர் திறன் சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 4.6.18
மேலதிக தகவல்களுக்கு: www.ssconline.nic.in


இந்திய ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய வேலை

நிறுவனம்: இந்திய ராணுவம்
வேலை: +2 டெக்னிக்கல் என்ட்ரி ஸ்கீம் அடிப்
படையிலான 4 வருட பயிற்சிக்குப் பின்பான அதிகாரிகள் தரத்திலான வேலை
காலியிடங்கள்: மொத்தம் 90
கல்வித் தகுதி: அறிவியல் பாடங்களை எடுத்து +2 தேர்வில் 70 % மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும்
வயது வரம்பு: 1.7.99 க்கு மேலும் 0.1.2002க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்கவேண்டும்
தேர்வு முறை: மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் வேலை வழங்கப்படும்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 14.6.18
மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in

+2 முடித்தவர்களுக்கு கடற்படையில் வேலை

நிறுவனம்: இண்டியன் நேவி
வேலை: சில துறைகளில் பயிற்சிக்குப் பின் அதிகாரி தரத்திலான மாலுமி வேலை
காலியிடங்கள்: குறிப்
பிடப்படவில்லை
கல்வித் தகுதி: கணிதம், இயற்பியலுடன் ரசாயனவியல், பயாலஜி அல்லது கம்ப்யூட்டர் பாடப்பிரிவில்
+2 முடித்திருக்கவேண்டும்
வயது வரம்பு: 1.2.98 க்கும் 31.1.2002க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தேர்வு முறை: எழுத்து, உடற் திறன் தேர்வு மற்றும் மருத்துவ சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.6.18
மேலதிக தகவல்களுக்கு: www.joinindiannavy.gov.in

எஞ்சினியரிங் பட்டதாரிகளுக்கு உரத் தொழிற்சாலையில் வேலை!

நிறுவனம்: நேஷனல் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் எனும் மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய உரத்தொழிற்சாலையின் 4 கிளைகளில் வேலை
வேலை: ஜூனியர் எஞ்சினியர் அசிஸ்டென்ட்(இதில் உற்பத்தி, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் பிரிவுகள் அடங்கும்) மற்றும் ஃபையர்மேன் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 129. இதில் ஜூனியர் எஞ்சினியர் வேலையில் அதிகபட்சமாக 127 இடங்களும் ஃபையர்மேன் வேலையில் 2 இடங்களும் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: எஞ்சினியர் வேலைக்கு அந்தந்த பிரிவுகளில் பி.எஸ்சி., டிப்ளமோ படிப்பும் ஃபையர்மேன் வேலைக்கு 10வது படிப்பும் அவசியம்
வயது வரம்பு: 18 முதல் 30 வரை. சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 17.6.18
மேலதிக தகவல்களுக்கு: www.nationalfertilizers.com

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு இண்டியன் ஆயில் கார்பரேஷனில் வேலை!

நிறுவனம்: ஐ.ஓ.சி.எல் எனப்படும் இண்டியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட்(எண்ணெய் நிறுவனம்)
வேலை: ஜூனியர் ஆபரேட்டர் எனும் பதவியில் கிரேட் 1 மற்றும் ஏவியேஷன் எனும் இரு பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 58. இதில் முதல் வேலையில் 25 மற்றும் இரண்டாவது வேலையில் 33 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: முதல் வேலைக்கு 10 வது படிப்புடன் வேலை பிரிவுகளில் 2 வருட ஐ.டி.ஐ படிப்பும், இரண்டாவது வேலைக்கு +2-ல் 45% மதிப்பெண்ணும் பெற்றிருப்பதுடன் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான லைசென்சும் வைத்திருக்கவேண்டும்
வயது வரம்பு: 18 - 26
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16.6.18
மேலதிக தகவல்களுக்கு: www.iocl.com

எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை

நிறுவனம்: ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் எனும் மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் ஆய்வு தொடர்பான நிறுவனத்தின் நியூ டெல்லி கிளை
வேலை: சோஷியல் சைக்காலஜிஸ்ட், சிவில் எஞ்சினியரிங், ஃபையர் சேஃப்டி ஆஃபிசர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் டெக்னீஷியன், சயின்டிஸ்ட் மற்றும் பிற பதவியிலான வேலைகள்
காலியிடங்கள்: மொத்தம் 90
கல்வித் தகுதி: ஒவ்வொரு துறைக்கும் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பயோ கெமிஸ்ட்ரி, பீடியாட்ரிக்ஸ், பி.எஸ்சி. நர்சிங் போன்ற படிப்புகளை சில துறைகளுக்கு கேட்கின்றனர். மற்ற வேலைகளுக்கு துறையின் வலைத்தளத்தைப் பார்க்கவும்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.6.18
மேலதிக தகவல்களுக்கு: www.aiims.edu

தொகுப்பு: டி.ரஞ்சித்