வேலை ரெடி



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

கப்பல் கட்டும் தளத்தில் புராஜக்ட் ஆபீஸர் பணி!

நிறுவனம்: கொச்சியில் இயங்கும் கப்பல் கட்டும் நிறுவனம்
வேலை: புராஜக்ட் ஆபீஸர்
காலியிடங்கள்: மெக்கானிக்கலில் 10, எலக்ட்ரிக்கலில் 6, எலக்ட்ரானிக்சில் 3, சிவிலில் 2, இன்ஸ்ட்ரூமென்
டேஷனில் 1. மொத்தம் 22 இடங்கள்.
கல்வித் தகுதி : பி.இ. அல்லது பி.டெக். படிப்பை மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், இன்ஸ்ட்ரூ மென்டேஷன் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30 வயதுக்குட்பட்டவர்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.4.2018
மேலதிக தகவல்களுக்கு: www.cochinshipyard.com

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் அதிகாரி வேலை!

நிறுவனம்: எய்ம்ஸ் மருத்துவ ஆய்வு மையத்தின் போபால் கிளைவேலை: குரூப்-பி பிரிவிலான அதிகாரி மற்றும் அலுவலகப் பணிகள்
காலியிடங்கள்: மெடிக்கல் சோசியல் சர்வீஸ் ஆபீஸர், டயட்டீசியன், பிரைவேட் செகரட்ரி, பிசியாட்ரிக் சோசியல் ஒர்க்கர், மெடிகோ சோசியல் ஒர்க்கர், அசிஸ்டன்ட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீஸர், புரோகிராமர், சீப் கேஷியர், ஆபீஸ் அசிஸ்டன்ட், வொக்கேசன் கவுன்சலர் உள்ளிட்ட 171 பணியிடங்கள்.

கல்வித் தகுதி: இளநிலை முதுநிலைப் பட்டதாரிகள், குறிப்பிட்ட பிரிவுகளில் மருத்துவப் பட்டம் பெற்றவர்கள், எஞ்சினியரிங் பட்டதாரிகள், துணை மருத்துவ டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், பிளஸ் 2 படித்தவர்களுக்குப் பணியிடங்கள் உள்ளன.
வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வயதுவரம்பு வேறுபடுகிறது. 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்குப் பணியிடங்கள் உள்ளன. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

தேர்வு முறை: கணினி அடிப்படையிலான தேர்வு, எழுத்துத் தேர்வு, திறமைத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.5.2018  
மேலதிக தகவல்களுக்கு: www.aiimsbhopal.edu.in

சென்னை உயர்நீதிமன்ற உதவியாளர் வேலை!

நிறுவனம்: சென்னை உயர் நீதிமன்றம்
வேலை: உதவியாளர் பணி
காலியிடங்கள்: நீதிபதிகளின் தனி உதவியாளர் 71, பதிவாளர்களுக்கான உதவியாளர் 10, துணைப் பதிவாளர்களுக்கான தனி உதவியாளர் 1. மொத்தம் 82 இடங்கள்.
கல்வித் தகுதி: நீதிபதிகளுக்கான தனி உதவியாளர் பிரிவுக்கு, பட்டப் படிப்புடன், முதுநிலை ஆங்கிலத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துப் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
பதிவாளர் மற்றும் துணைப் பதிவாளருக்கான தனி உதவியாளர் பதவிக்கு, ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் முதுநிலைத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மூன்று பிரிவுக்குமே கம்ப்யூட்டர் ஆன் ஆபிஸ் ஆட்டோமேஷனிலும் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்
வயதுவரம்பு : 18 - 30
தேர்வுமுறை: ‘ஸ்கில் டெஸ்ட்’ மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள் : 4.5.2018
மேலதிக தகவல்களுக்கு: www.hcmadras.tn.nic.in

துணை ராணுவப் படையில் சோல்ஜர் வேலை!

நிறுவனம்: அசாம் ரைபிள்ஸ் படை எனும் துணை ராணுவப் படை
வேலை: ஜெனரல் டியூட்டி சோல்ஜர் பிரிவு.  
காலியிடங்கள்: ஜெனரல் டியூடி சோல்ஜர்
பிரிவில் 171, ஹவில்தார் பிரிவிலான கிளார்க்கில் 10, பெர்சனல் அசிஸ்டென்டில் 1, ரேடியோ மெக்கானிக்கில் 2, ஆர்மரில் 2, எலக்ட்ரீசியனிலில் 2, நர்சிங் அசிஸ்டென்டில் 1, அட்டென்டன்டில் 1, குக்கில் 8, சபாய் பிரிவில் 4, வாஷர்மேனில் 5, பார்பரில் 3, எக்விப்மென்ட் பூட் ரிப்பேரரில் 2, டெய்லரில் 1, என மொத்தம் 213 இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி: இந்தப் பணியிடங்களில் பெரும்பான்மையான இடங்களுக்குப் பத்தாம் வகுப்பில் தேர்ச்சியுடன் விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து சிறப்புத் தகுதிகள் தேவைப்படும்.
வயதுவரம்பு: 18 - 38
விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.4.2018
மேலதிக தகவல்களுக்கு: www.assamrifles.gov.in

இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

நிறுவனம்: பொதுத்துறை வங்கிகளில் அதிக கிளைகளைத் தமிழகத்தில் கொண்டுள்ள இந்தியன் வங்கி.
வேலை: சிறப்பு அதிகாரி பணி
காலியிடங்கள்: மொத்தம் 145 அனைத்துக் காலியிடங்களும், இரண்டாம் நிலை மேலாளர் பிரிவைச் சார்ந்தவை.
வயதுவரம்பு: பெரும்பான்மையான பிரிவுகளுக்கு 23 - 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து, சிறப்புத் தகுதி தேவைப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 2.5.2018.
மேலதிக தகவல்களுக்கு www.indianbank.in

தொகுப்பு: வெங்கட்