வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

விமானப்படையில் குரூப் ‘சி’ பிரிவில் வேலை!

நிறுவனம்: இண்டியன் நேவி எனப்படும் இந்திய விமானப்படை
வேலை: குக், பியரர், டெலிபோன் ஆபரேட்டர் உட்பட 11 பிரிவுகளில்  குரூப் ‘சி’ வேலை
காலியிடங்கள்: மொத்தம் 74
கல்வித்தகுதி: 10வது படிப்பு
வயது வரம்பு: 56க்குள்
தேர்வு முறை: எழுத்து, உடல்திறன் சோதனை மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.3.18
மேலதிக தகவல்களுக்கு: https://www.joinindiannavy.gov.in

இன்சூரன்ஸ் பயிற்சி நிறுவனத்தில் பேராசிரியர் பணி!

நிறுவனம்: டெல்லியில் உள்ள எம்ப்ளாயிஸ் ஸ்டேட்

இன்சூரன்ஸ் ஸ்கீம் எனும் தொழிலாளர்களுக்கான காப்புறுதி பற்றிக் கற்றுக்கொடுக்கும் பேராசிரியர் வேலைக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
வேலை: பேராசிரியர் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 206. இதில் பேராசிரியர் 46, இணைப் பேராசிரியர் 75 மற்றும் துணைப் பேராசிரியர் 85 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித்தகுதி: முதல் வேலைக்கு எம்.டி அல்லது எம்.எஸ் படிப்பும், இரண்டாம் மற்றும் மூன்றாம் வேலைகளுக்கு எம்.டி, எம்.எஸ் அல்லது டெண்டிஸ்ட்ரியில் எம்.டி.எஸ் படிப்பு அவசியம்
வயது வரம்பு: பொதுப்பிரிவினர் 50 வயதுக்குள் இருத்தல்வேண்டும்
தேர்வு முறை: எழுத்து, நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 2.4.18
மேலதிக தகவல்களுக்கு: www.esic.nic.in

எஞ்சினியர்களுக்குக் கட்டுமானத் துறையில் வேலை

நிறுவனம்: சர்ட்டிஃபிகேஷன் எஞ்சினியர்ஸ் இன்டர்
நேஷனல் லிமிடெட் எனும் மும்பையில் உள்ள மத்திய அரசின் கட்டுமானத்துக்கான எஞ்சினியரிங் துறை நிறுவனம்
வேலை: எஞ்சினியர், திட்டம், சேஃப்டி என 18 பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 139
கல்வித்தகுதி: வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப எஞ்சினியரிங் படிப்பில் டிகிரி அல்லது டிப்ளமோ படிப்பு
வயது வரம்பு: வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப வயது குறிப்
பிடப்பட்டுள்ளது. 35 லிருந்து 45 வயதுக்கு உட்பட்டவர்கள் வேலைப் பிரிவுகளுக்கு கேட்கும் வயதுக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம்
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22.3.18
மேலதிக தகவல்களுக்கு: www.ceil.co.in

மத்திய அரசின் கட்டுமான நிறுவனத்தில் வேலை!

நிறுவனம்: என்.பி.சி.சி. எனப்படும் மத்திய அரசின்
நேஷனல் பில்டிங் கன்ஸ்ட்ரக்‌ஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (கட்டுமானத்துக்கான நிறுவனம்)
வேலை: மேனேஜர், எக்ஸிகியூட்டிவ், எஞ்சினியர் என 30 துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 145
கல்வித்தகுதி: சிவில் எஞ்சினியரிங், ஐ.டி.டபிள்.யு, சட்டத்துறையில் பட்டப்படிப்பு, எம்.பி.ஏ, பி.ஜி.டி.எம் என வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப படிப்பு கேட்கப்பட்டுள்ளது
வயது வரம்பு: வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ வேலைக்கான வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது
தேர்வுமுறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 25.3.18
மேலதிக தகவல்களுக்கு: www.nbccindia.com

மத்திய ரயில்வேயில் டிக்கெட் சேவக் பணி!

நிறுவனம்: மும்பையைத் தலைமை இடமாகக்கொண்டு இயங்கும் சென்ட்ரல் ரயில்வே
வேலை: ஜன் சதாரன் டிக்கெட் சேவக் எனும் பதவியிலான டிக்ெகட் சேவைப் பிரிவில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 500
கல்வித்தகுதி: 10வது தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 27 வரை
தேர்வு முறை: எழுத்து அல்லது நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 2.4.18
மேலதிக தகவல்களுக்கு: www.cr.indianrailways.gov.in

தொழிற்சாலைப் பாதுகாப்புப் படையில் வேலை!

நிறுவனம்: சி.ஐ.எஸ்.எஃப் எனப்படும் மத்திய அரசு தொழிற்சாலைப் பாதுகாப்புப் படை
வேலை: கான்ஸ்டபிள் பதவியிலான இரு துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 447. இதில் டிரைவர் 344 மற்றும் டிரைவர் கம் பம்ப் ஆபரேட்டர் 103 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித்தகுதி: 10வது தேர்ச்சி
வயது வரம்பு: 21 முதல் 27 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்து, தொழில் திறன் தேர்வு மற்றும் மருத்துவ சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19.3.18
மேலதிக தகவல்களுக்கு: www.cisf.gov.in

தொகுப்பு: டி.ரஞ்சித்