அடடே...ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!



மொழி

Trains the Minds and Minds the Trains 


ஓர் அந்திமாலைப் பொழுது ரகுவும் ரவியும் கேன்டீன் வடையை ருசி பார்த்துக் கொண்டிருந்தனர். “சார். வாட்ஸ் த டிஃப்ரன்ஸ் பிட்வீன் அ மாஸ்டர் அண்ட் அ ஸ்டேஷன் மாஸ்டர்?”(What’s the difference between a master and a station master?) என்ற ரவியைப் பார்த்து, தேநீர்க் கோப்பையைத் தள்ளி வைத்தபடி, புன்னகைத்தார் ரகு. “உனக்கு எப்படி இந்த மாதிரி கேள்வியெல்லாம் தோணுது ரவி?” என்று கேட்டார். “அத ஏன் கேக்கறீங்க சார், எங்க மாமா ஆத்தூர் பாண்டியன் ஒருத்தர் இருக்காரு. அவருதான் கேக்கச் சொன்னார்” என்றான் ரவி.

 “நமது ராஜாஜி அவர்களை ஒரு முறை யாரோ இந்த மாதிரி கேள்வி கேட்டபோது “A Master trains the minds and a Station master minds the trains” என்றாராம். அதாவது, ஆசிரியர் (Master) என்பவர் மனங்களை (Minds) கவனித்துப்  பயிற்சி (trains) அளிக்கிறார். ஸ்டேஷன் மாஸ்டர் (Station Master) என்பவர் புகைவண்டிகளை (trains) கவனித்துக்கொள்கிறார்.

(minds) இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னென்னா… ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையைப் பெயர்ச் சொல்லாகவோ(Noun), வினைச் சொல்லாகவோ(Verb), பெயருரிச் சொல்லாகவோ (Adjective) அல்லது வினையுரிச் சொல்லாகவோ (Adverb) உபயோகப்படுத்த வாய்ப்புண்டு. A Master trains (Verb) the minds இந்த வாக்கியத்தில் ‘ட்ரெய்ன்’ வினைச்சொல்லாக உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. அதே சமயம் and a Station master minds the trains (Noun) இந்த வாக்கியத்தில் ‘ட்ரெய்ன்’ பெயர்ச்சொல்லாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

A Master trains the minds (Noun) இந்த வாக்கியத்தில் ‘மைண்ட்’ பெயர்ச்சொல்லாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. and a Station master minds (Verb) the trains இந்த வாக்கியத்தில் ‘மைண்ட்’ வினைச் சொல்லாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. புரிகிறதா?” என்று கேட்ட ரகுவைப் பார்த்த ரவி, வடிவேலு பாணியில் “லைட்டா புரியுது சார்” என்று சற்றே கிண்டலுடன் சொன்னான். ரவியை மேலும் கீழும் பார்த்த ரகு ‘‘அதெல்லாம் நல்லா புரியணும்னா, you must trouble the trouble till the trouble troubles” என்றவாறே கேன்டீனிலிருந்து வெளியே சென்றார்.

ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com

சேலம் ப.சுந்தர்ராஜ்