வேலை ரெடி!வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

யூனியன் வங்கியில் அதிகாரி பணி!

நிறுவனம்: பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
வேலை: 2 பிரிவு களில் வேலை. 1. ஃபோரக்ஸ் ஆபீஸர், 2.இன்டர்
கிரேடட் ட்ரெஷரி ஆபீஸர்
காலியிடங்கள்: மொத்தம் 100. இதில் இரண்டு வேலைகளுக்கும் தலா 50 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித்தகுதி: முதல் வேலைக்கு  ஏதேனும் ஒரு டிகிரியும், இரண்டாம் வேலைக்கு ஃபினான்ஸ், காமர்ஸ், புள்ளியியல், கணிதத்தில் டிகிரியும்
வயது வரம்பு:
23 முதல் 35 வரை
தேர்வு முறை: எழுத்து, குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 13.1.18
மேலதிக தகவல்களுக்கு: www.unionbankofindia.co.in

எய்ம்ஸ் மருத்துவமனையில் நர்சிங் ஆர்டர்லி பணி!

நிறுவனம்: ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ்(எய்ம்ஸ்) எனப்படும் மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வுக்கான நிறுவனத்தின் ராய்பூர் கிளை
வேலை: 10 துறைகளில் வேலை உண்டு. ஆனால் ஹாஸ்பிட்டல் அட்டன்டண்ட்(நர்சிங் ஆர்டர்லி)கிரேட் 2ல் தான் 100 காலியிடங்கள் அதிகப்படியாக உள்ளது
காலியிடங்கள்: மொத்தம் 190
கல்வித்தகுதி: நர்சிங் ஆர்டர்லி வேலைக்கு 10வது படிப்புடன் ஹாஸ்பிட்டல் சர்வீஸ் துறையில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்
வயது வரம்பு: 18 முதல் 30 வரை
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.1.18
மேலதிக தகவல்களுக்கு: www.aiimsraipur.edu.in

பத்தாவது படிப்புக்கு டெல்லி போலீசில் வேலை!

நிறுவனம்: டெல்லி போலீஸ்
வேலை: எம்.டி.எஸ் எனப்படும் மல்டி டாஸ்கிங் சர்வீஸ் எனும் பதவியில் காவல்படை இல்லாத சிவிலியன் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 707. இதில் குக் 253, சஃபை கர்மன்காரி 237 இடங்கள் அதிகபட்சமாக இருக்கிறது.
கல்வித்தகுதி: எல்லா வேலைகளுக்குமே 10வது படிப்பு அல்லது துறை சார்ந்த ஐ.டி.ஐ படிப்பு எதிர்பார்க்கப்படுகிறது
வயது வரம்பு:
18 முதல் 27 வரை
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16.1.18
விண்ணப்பிக்க மேலதிக தகவல்
களுக்கு: www.delhipolice.nic.in

மருத்துவ ஆய்வு மையத்தில் சீனியர் ரெசிடண்ட் பணி!

நிறுவனம்: மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வு நிறுவனமான எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரம் கிளை
வேலை: சீனியர் ரெசிடென்ட் மற்றும் ஜூனியர் ரெசிடென்ட் இருபிரிவுகளில் மருத்துவர் வேலை. முதல் பிரிவில் சுமார் 26 மருத்துவத் துறை
களில் காலியிடங்கள் உண்டு
காலியிடங்கள்: மொத்தம் 293. இதில் சீனியர் ரெசிடெண்ட் பிரிவில் 193 இடங்களும், ஜூனியர் பிரிவில் 100 இடங்களும் காலியாக உள்ளது
கல்வித்தகுதி: முதல் வேலைக்கு எம்.டி,எம்.எஸ், டி.எம், எம்.சி.எச் போன்ற படிப்பும், இரண்டாம் வேலைக்கு
எம்.பி.பி.எஸ் படிப்பும் அவசியம்
வயது வரம்பு: 33க்குள்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 6.1.18
மேலதிக தகவல்களுக்கு: www.aiimsbhuvaneswar.edu.in

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை

நிறுவனம்: இந்திய ராணுவம்
வேலை: ஃபையர்மேன் மற்றும் டிரேட்ஸ்மேன் மேட் எனும் இருபிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 174. இதில் டிரேட்ஸ்மேன் வேலையில் மட்டும் 150 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித்தகுதி: இரண்டு வேலைகளுக்குமே 10 வது படிப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 25 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்து மற்றும் திறன் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 7.1.18
மேலதிக தகவல்களுக்கு: www.indianarmy.nic.in

BSNL-ல் ஜூனியர் எஞ்சினியர் பணி!

நிறுவனம்: மத்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்
வேலை: ஜூனியர் எஞ்சினியர்
காலியிடங்கள்: மொத்தம் 107
கல்வித்தகுதி: 10 வது அல்லது +2 படிப்புடன் டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ரேடியோகிராஃபி, கம்ப்யூட்டர், இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் இன்ஃபர்மேஷன் துறைகளில்
டிப்ளமோ படிப்பு
வயது வரம்பு: 18 முதல் 55
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.1.18
மேலதிக தகவல்களுக்கு: www.internalbsnlexam.com