வேலை ரெடி!
நவோதயா பள்ளிகளில் பல்வேறு பணிகள்

நிறுவனம்: மத்திய அரசின் பள்ளிக்கல்வித் துறை மூலம் நாடு முழுவதும் நிர்வகிக்கப்படும் நவோதயா வித்யாலயாவின் பல்வேறு கிளைகளில் வேலை
வேலை: நான் - டீச்சிங் துறைகளில் பல்வேறு வேலைகள். அதிகபட்ச வேலைகள் ஸ்டாஃப் நர்ஸ், கேட்டரிங் அசிஸ்டன்ட், எல்.டி.சி/ஸ்டோர்கீப்பர் மற்றும் லேப் அசிஸ்டன்ட் பிரிவுகளில் வேலை உண்டு
காலியிடங்கள்: மொத்தம் 689
கல்வித்தகுதி: பி.காம், இந்தி/ஆங்கிலத்தில் முதுகலை, +2 படிப்புடன் டைப்பிங், ஷார்ட்ஹேண்ட் தேர்ச்சியும் இருந்தால் இந்த வேலைகளில் ஒன்று கிடைக்கலாம்
வயது வரம்பு: வேலைப் பிரிவுகள் அடிப்படையில் 18 முதல் சில வேலைகளுக்கு உட்சபட்ச வயதாக 35 வரை கேட்கப்
பட்டுள்ளதுவிண்ணப்பிக்க கடைசித் தேதி: 13.12.17
மேலதிக தகவல்களுக்கு: www.nvshq.org

மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தில் வேலை

நிறுவனம்: மத்திய அரசுத் துறையான சென்ட்ரல் கவர்மென்ட் ஹெல்த் ஸ்கீம் எனும் அரசு பொது மருத்துவத் திட்டத்தில் மும்பையிலுள்ள பூனே கிளையில் வேலை
வேலை: பார்மசிஸ்ட், நர்சிங் ஆபீஸர், லேப் டெக்னீஷியன் உட்பட 10 பிரிவுகளில் மருத்துவம் தொடர்பான வேலை
காலியிடங்கள்: மொத்தம் 104
கல்வித்தகுதி: 10 பிரிவுகளுக்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் உண்டு. பார்மசி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், ஜெனரல் நர்சிங், மிட்வைஃபரி, லேப் டெக்னாலஜி, மெடிக்கல் டெக்னாலஜி படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏதாவது ஒரு வேலையில் அமரலாம்
வயது வரம்பு: வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப 18 லிருந்து 35 வயது வரை
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 4.12.17
மேலதிக தகவல்களுக்கு: www.cghspune.gov.in

சிவில் எஞ்சினியர்களுக்கு பெங்களூரு மெட்ரோ ரயில்வேயில் வேலை

நிறுவனம்: பெங்களூரு மெட்ரோ ரயில் கார்பரேஷன் லிமிடெட்
வேலை: கிராஜுவேட் எஞ்சினியர் (சிவில்)
காலியிடங்கள்: மொத்தம் 80
கல்வித்தகுதி: சிவில் எஞ்சினியரிங் டிகிரியில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்
களுடன்  தேர்ச்சி
வயது வரம்பு: 35க்குள்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.12.17
மேலதிக தகவல்களுக்கு: www.bmrc.co.in

பட்டதாரிகளுக்கு முப்படைகளில் வேலை!

நிறுவனம்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி அமைப்பின் சி.டி.எஸ் எனப்படும் கம்பைண்டு டிஃெபன்ஸ் சர்வீஸ் தேர்வு
வேலை: இண்டியன் மிலிட்டரி அகாடமி, இண்டியன் நேவல் அகாடமி, ஏர் ஃபோர்ஸ் அகாடமி, ஆபீஸர் டிரெயினிங் அகாடமி மற்றும் ஆபீஸர் டிரெயினிங் அகாடமியில் பெண்களுக்கான நான் - டெக்னிக்கல் பிரிவுகளில் அதிகாரி வேலை
காலியிடங்கள்: மொத்தம் 414
கல்வித்தகுதி: மிலிட்டரி வேலைக்கும் ஏர்ஃபோர்ஸ் வேலைக்கும் ஏதாவது ஒரு டிகிரி, நேவல் வேலைக்கு பி.இ. தேர்ச்சி வேண்டும்
வயது வரம்பு: மிலிட்டரி, நேவல் வேலைக்கு 95களில் பிறந்தவர்கள், ஏர்ஃபோர்ஸ் வேலைக்கு 20 முதல் 24க்குள், மற்ற இரு வேலைகளுக்கும் 94ல் பிறந்தவர்களாக இருத்தல் அவசியம்
தேர்வு முறை: பல்வேறு தேர்வுகள்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 4.12.17
மேலதிக தகவல்களுக்கு: www.upsc.gov.in

பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி!

நிறுவனம்: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடோ எனும் பரோடா வங்கி
வேலை: ஸ்பெஷலைஸ்டு ஆபீஸர் எனும் சிறப்பு அதிகாரி பணி
காலியிடங்கள்: மொத்தம் 427. 12 துறைகளில் காலியிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக ஃபினான்ஸ்
(கிரெடிட்)ல் 140 இடங்களும், சேல்ஸ் எனும் விற்பனைப் பிரிவில் 150 இடங்களும் காலியாக உள்ளது.
கல்வித்தகுதி: புள்ளியியல், பொருளாதாரம், எம்.பி.ஏ, வங்கியியல், ஃபினான்ஸ், பி.இ., கம்ப்யூட்டர், இன்ஃபர்மேஷன் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் படித்திருப்பவர்கள் இந்த வேலைகளில் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்வயது வரம்பு: 30 - 50 வயது வரையுள்ளவர்கள் இந்த வேலைகளில் ஏதாவது ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்
தேர்வு முறை: குரூப் டிஸ்கஷன், நேர்முகம் மற்றும் உளவியல் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 8.12.17
மேலதிக தகவல்களுக்கு: www.bankofbaroda.co.in

மத்திய உணவுக்கழகத்தில் வாட்ச்மேன் வேலை

நிறுவனம்: மத்திய அரசின் உணவுக் கழகமான ஃபுட் கார்பரேஷன் ஆஃப் இந்தியாவின் ஹரியானா கிளையில் வேலை
வேலை: வாட்ச்மேன்
காலியிடங்கள்: மொத்தம் 380. இதில் எஸ்.சி 72, ஓ.பி.சி 102, பி.டபிள்யு.டி 11, எக்ஸ் சர்வீஸ்மேன் 93 மற்றும் பொதுப்பிரிவினர் 206 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித்தகுதி: 8வது தேர்ச்சி
வயது வரம்பு: 18  25
தேர்வு முறை: எழுத்து மற்றும் உடல் திறன் சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 4.12.17
மேலதிக தகவல்களுக்கு: www.fciharapply.com