அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!



மொழி

ABBREVIATION vs ACRONYM


அலுவலக ஊழியர்கள் அமைதியாக வேலை பார்த்துக்கொண்டிருக்க, ரவி மட்டும் ரகுவின் இருக்கைக்கு அருகில் வந்தமர்ந்து, “AIDS என்ற abbreviation-ன் expansion என்னங்க சார்?” என்றான். ரவியைப் பார்த்த ரகு, “Acquired Immuno Deficiency Syndrome. ஆனா இந்த AIDS என்பது Abbreviation கிடையாது. அது ஒரு Acronym. அதாவது, Acronym is itself a word formed from the initial letters of the several words. உதாரணத்திற்கு 1.NASA (National Aeronautics and Space Administration) 2. NATO (North Atlantic Treaty Organisation) 3. We went scuba-diving in Australia.

(SCUBA- Self-Contained Underwater Breathing Apparatus) 4. AKA (Also Known As) He is Chiyan aka Vikram, தமிழில் சொல்ல வேண்டுமென்றால் ‘சியான் என்கிற விக்ரம்’. இதில் ‘என்கிற’ என்பதைத்தான் ஆங்கிலத்தில் ‘அகா’ என்கிறார்கள். இதற்கு alias (எய்லியஸ்) என்ற இன்னொரு வார்த்தையும் ஆங்கிலத்தில் உண்டு” என்றார்.

உடனே அருகில் அமர்ந்திருந்த ப்ரவீணா, “அப்ப அப்ரிவியேஷன் என்பதற்கு என்ன அர்த்தம் சார்?” என்றாள். “அப்ரிவியேஷன் என்பதும் சுருக்கம்தான். (A shortened form of a word or phrase  or Shortening something by omitting parts of it.) அதாவது, ஒரே ஒரு வார்த்தையின் சுருக்கமாக இருக்கலாம்.

{Mr- Mister ,Mrs.,- Mistress Dr  doctor} அதே மாதிரி பல வார்த்தைகளின் முதல் எழுத்துகளால் ஆனவையாகவும் இருக்கலாம். உதாரணத்திற்கு e.g. (for example Latin exempligratia - ) PC (Personal Computer) B.A (Bachelor of Arts)… M.B.B.S ( Medicinae Baccalaureus, Baccalaureus Chirurgiae, or Bachelor of Medicine, Bachelor of Surgery in English) போன்றவற்றைச் சொல்லலாம்” என்றார். 

“அதெல்லாம் சரிங்க சார். இரண்டுமே ‘சுருக்கம்’தானே. எதுக்கு ‘அப்ரிவியேஷன்’ ‘அக்ரனிம்’ என்று இரண்டு வார்த்தைகளைப் போட்டு குழப்பணும்?” என்று கேட்டான் ரவி. “ரவி… World Health Organisationஐ சுருக்கமாக WHO (ஹூ) என்றுதான் சொல்வார்கள். இது அக்ரனிம். எனவே, ஹூ என்கிறார்கள். அதுவே அப்ரிவியேஷனாக இருந்திருந்தால் ‘டபள்யு ஹெச் வோ’ என்றுதான் சொல்லியிருக்க முடியும். UNESCO, U.S.A., இந்த வார்த்தைகளில் UNESCO (United Nations Educational Scientific and Cultural Organization) என்ற இந்த வார்த்தை ஒரு அக்ரனிம்.

ஏனெனில் இதை யுனெஸ்கோ என்ற ஒரு தனிப் பெயராகவோ அல்லது வார்த்தையாகவோதான் உச்சரிக்கப்படுகிறது. அதை விடுத்து யூஎன்ஈஎஸ்சிஓ என உச்சரிக்கப்படுவதில்லை. அதே சமயம் U.S.A என்பதை யாரும் ‘உசா’ என்றழைப்பதில்லை. யூஎஸ்ஏ என்றுதான் உச்சரிக்கிறார்கள். எனவே, அது அப்ரிவியேஷன் ஆகும். இப்போது புரிகிறதா?” என்றார் ரகு. “நன்றாகவே புரிந்துவிட்டது சார். மிக்க நன்றி” என்று சொல்லி தன் இருக்கையை நோக்கிச் சென்றான் ரவி. ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com  
                                          

சேலம் ப.சுந்தர்ராஜ்