அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!



மொழி

I HAVE NOT BEEN INFORMED

அவசர அவசரமாக அலுவலகத்துக்குள் வந்த ரகு, சேரை தட்டிவிட்டு அமர்ந்தபோது, “சார், எனக்கு ஒரு சந்தேகம். Select the correct active voice of the sentence for ‘I have not been informed’ a) You will not inform me. b) They will not inform me. c) None of you will inform me. d) None of you have informed me yet.” என்றபடியே வந்தமர்ந்தார் கணக்காளர் கனகசபை.

ரகுவிற்கு அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சரியம். வழக்கமாக ரவியோ அல்லது ப்ரவீணாவோதானே சந்தேகம் கேட்பாங்க. “என்ன சார் இது? என்னை விட அதிகம் படிச்சவங்க நீங்க. என்னை விட அழகா ஆங்கிலம் பேசறவங்க நீங்க. உங்களுக்கு பதில் தெரியாதா என்ன?” என்று ரகு கேட்டார். அதற்கு கனகசபை, “பதில் தெரியும் சார். ஆனா எப்படி சரின்னு விளக்கத் தெரியல. என் பேரன் கேட்டான். அதான் உங்ககிட்ட கேட்டேன்” என்றார்.

“வாஸ்தவம்தான். விளக்கம் சொல்றது ரொம்ப சிம்பிள் சார். அதாவது, I have not been informed என்பது ப்ரசென்ட் பெர்ஃபெக்ட்டில் (Present Perfect) உள்ளது. எனவே, பதிலும் அதே டென்சில்(Tense) தான் இருக்கவேண்டும். இந்த சிம்பிள் லாஜிக்கை வைத்துப் பார்த்தால் கொடுக்கப்பட்ட நான்கு பதில்களில் முதல் மூன்றுமே சரிவராது. நான்காவது பதில் (None of you have informed me)மட்டுமே ப்ரசென்ட் பெர்ஃபெக்டில் உள்ளது. அதனால அந்த பதில்தான் சரியான பதில். சரியா சார்?” என்று ரகு கேட்டார்.

உடனே கனகசபை,“வாவ் சூப்பர்ங்க சார். இதான் சார். இந்த மாதிரியான விளக்கம்தான் தேவை. ரவி சொல்லித்தான் உங்ககிட்ட கேட்டேன்.தேங்க்யூ வெரிமச் சார்” என்று அவர் சொன்னபோது அவரது செல்ஃபோனில் எஸ்.எம்.எஸ். வந்தது. அதைப் படித்துப் பார்த்த அவர் “சார். என் பேரன்தான். இன்னொரு கேள்வியை அனுப்பியிருக்கிறான்.

I know a doctor you are referring to. இந்த வாக்கியத்தில் என்னங்க சார் தப்பு?” எனக் கேட்டார். தன் கடிகாரத்தைப் பார்த்த ரகு,“a doctor என்பது தப்பு. ஏன் தப்பு? எது சரி? என்பதை நாளைக்கு விளக்கமாகச் சொல்றேனே” என்றவாறே தன் லேப்டாப்பை திறந்தார்.ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள: englishsundar19gmail.com                      

சேலம் ப.சுந்தர்ராஜ்