செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்

சி.எஸ்.ஐ.ஆர்.ல் முதுகலைப் பட்டம் படிக்கலாம்!

மைசூரில் உள்ள மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில், எம்.எஸ்சி. உணவுத் தொழில்நுட்பம் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் வேளாண்மை, பொறியியல், தொழில்நுட்பம் போன்றவற்றில் ஏதேனும் ஒரு துறை சார்ந்த பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சேர்க்கை முறை: ஆன்லைன் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.5.2017
விவரங்களுக்கு: www.cftri.com

எப்.டி.டி.ஐ-ல் மாணவர் சேர்க்கை

மத்திய அரசின் கீழ் செயல்படும் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இளநிலை மற்றும் முதுநிலை
பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்: பி.எஸ்சி.- காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, சில்லறை மற்றும் ஃபேஷன் வர்த்தகம், தோல் மற்றும் ஆபரணங்கள் வடிவமைப்பு
எம்.எஸ்சி.-காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, சில்லறை மற்றும் பேஷன் வர்த்தகம், கேட்/கேம்
வயது வரம்பு: பி.எஸ்சி., படிப்பு களுக்கு 25 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். எம்.எஸ்சி. படிப்புகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.
கல்வித்தகுதி: இளநிலைப் படிப்புகளுக்கு +2வில் தேர்ச்சி. முதுநிலைப் படிப்புகளுக்கு ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி.
சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.5.2017
விவரங்களுக்கு: http://fddi.attest.co.in

உணவுப் பதன தொழில்நுட்பம் படிக்கலாம்!

மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய உணவுப் பதன தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் தஞ்சாவூரில் உள்ளது. இந்நிறுவனம் இளநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்: பி.டெக்.,ஃபுட் ப்ராசசிங் எஞ்சினியரிங் மற்றும் பிஎச்.டி., பயோடெக்னாலஜி
கல்வித்தகுதி: பிஎச்.டி., படிப்பில் சேர்க்கை பெற, பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பிளான்ட் பயோ டெக்னாலஜி, பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ், பயலாஜிகல் சயின்ஸ், ஃபுட் டெக்னாலஜி, ஃபுட் சயின்ஸ், கெமிக்கல் எஞ்சினியரிங், அக்ரிகல்சர்
உள்ளிட்ட ஏதேனும் ஒரு பாடத்தில் எம்.எஸ்சி.
அல்லது எம்.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.டெக். படிப்பிற்கு ஜே.இ.இ. தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பி.டெக். படிப்பிற்கு 16.6.2017; பிஎச்.டி. படிப்பிற்கு 17.5.2017
விவரங்களுக்கு: www.iifpt.edu.in

மகாத்மா காந்தி படித்த பள்ளி அருங்காட்சியகமாகிறது!

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் உயர்நிலைப் பள்ளி பிரிட்டிஷ் ஆட்சியின்போது 1853-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டது. அப்போதைய நாட்களில் இந்தப் பள்ளி மட்டும்தான் சவுராஷ்டிரா பகுதியில் இருந்த ஒரே ஆங்கிலவழிக்
கல்வியைப் பயிற்றுவிக்கும் பள்ளியாகும். இப்போது இருக்கும் ஆல்ஃப்ரெட் உயர்நிலைப் பள்ளியின் கட்டடமானது 1875-ம் ஆண்டு ஜுனகத்தின் நவாப்பால் கட்டப்பட்டது.

மகாத்மா காந்தி இப்பள்ளியில் கடந்த 1880 முதல் 1887 வரையில் படித்தார்.  1947-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இப்பள்ளியானது மோகன்தாஸ் காந்தி உயர்நிலைப் பள்ளியாகப் பெயர் மாற்றப்பட்டது. பள்ளியின் பெயரில் காந்திஜியின் பெயர் இணைக்கப்பட்டிருந்தாலும் இப்போது பள்ளிக் குழந்தைகளுக்குக் கல்வியைப் பயிற்றுவிப்பதில் மோசமான பதிவையே பெற்றுள்ளது. சிலவருடங்களுக்கு முன்னதாகப் பள்ளியில் படித்த மாணவர்கள் பெரும்பாலானோரால் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறமுடியாத நிலையே காணப்பட்டது.

பள்ளியை மூடிவிட்டு அதனை அருங்காட்சியகம் ஆக்கும் திட்டத்தைக் கடந்த வருடம் ராஜ்கோட் மாநகராட்சி குஜராத் மாநில அரசுக்கு அனுப்பி வைத்தது. மாநகராட்சியின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட குஜராத் மாநில அரசு, அம்மாநில கல்வித்துறையை இதற்கான நடவடிக்கையைத் தொடங்குமாறும், பள்ளிக் கட்டடத்தை மாநகராட்சியிடம் வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.