பதினெட்டாம் பக்கத்து பால்கோவா!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

நடுப்பக்கத்து ஸ்ரேயாவின் கனிந்த மனம் வேண்டுமானால் கலங்காமல் இருக்கலாம். எங்கள் பிஞ்சு மனம் வெம்பிப் போவதை யாரும் தடுக்க முடியாது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

பதினெட்டாம் பக்கத்து பால்கோவாவைப் பார்த்தால் ஹார்ட் அட்டாக் மட்டுமா வரும்? இன்ப அதிர்ச்சியில் கிட்னியே கூட சட்னி ஆகிவிடும்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

‘முத்து பத்து’ என்று டைட்டிலில் பொய் சொல்லிவிட்டீர்கள். கொட்டியவையெல்லாம் முத்துக்கள் அல்ல. அதைவிட காஸ்ட்லியான வைரங்கள்.
 -பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.

‘ஹாலிவுட்டுக்குப் போகிறார் அஞ்சலி’ என்கிற செய்தி மகிழ்ச்சியாக இருந்தது. பிறவிப் போராளியான அஞ்சலிக்கு இந்த அந்தஸ்து கிடைத்திருப்பது கொஞ்சம் லேட்டுதான்.
- அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி.

‘நான் நார்மல் நாயகி அல்ல’ என்கிற ஆர்.ஜே.ஆனந்தியின் அறிவிப்பே அதிரடியாக இருக்கிறது. சின்னத்திரையில் சாதனை புரிந்த அவர் வெள்ளித்திரையிலும் கோலோச்சுவார் என்று நம்புவோம்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘தமிழ்ப்படம்’ என்கிற டைட்டிலில் தன் வாழ்க்கை வரைபடத்தை சிறப்பாக வரைந்திருக்கிறார் சேத்தன். திறமையான நடிகரான அவரை திரையுலகம் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

அட்டையில் ரெஜினாவின் வனப்பான படத்தைப் போட்டு பசுமைப் புரட்சி ஏற்படுத்தி விட்டீர்.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.