பானை இங்கே.. தண்ணீர் எங்கே?ரீடர்ஸ் கிளாப்ஸ்!

தண்ணீர்ப் பஞ்சத்தில் தவிக்குது தமிழகம். நீரோ ஈரம் சொட்டச் சொட்ட புளோஅப் போட்டு கடுப்பேத்துறீரு. எங்க சாபம் உம்மை சும்மா விடாது ஓய்.
- கே.கே.பாலசுப்ர மணியன், குனியமுத்தூர்.

நடுப்பக்கத்து அமலாபாலுக்கு கமெண்டு காணோமே? அமலாவைப் பார்த்து அவ்வளவு பயமா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

அட்டையில் கீர்த்தி பாண்டியன், பின்னட்டையில் அனுஸ்மிருதி என்று அசத்திவிட்டீர். புத்தம் புதிய மொட்டுகளை ஆதரிப்பதில் ‘வண்ணத்திரை’க்கு நிகரான பத்திரிகை தமிழிலேயே இல்லை.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

நெம்புகோல் தத்துவத்துக்கு பொருள் கூறி அறிவியலிலும் தான் கில்லி என்பதை சரோஜாதேவி நிரூபித்திருக்கிறார்.
- அ.சம்சுதீன், நெய்க்காரப்பட்டி.

ஜெய்யோடு லவ் இல்லை; நல்ல மாப்பிள்ளையா பாருங்க என்கிற அஞ்சலியின் பேட்டியை நம்பி கழுத்தை நீட்டலாமா?
- கே.நடராஜன், திருவண்ணாமலை.

19-ஆம் பக்க பானை பெருசாதான் இருக்கு. ஆனா, அதில் நிரப்ப தண்ணீர்தான் இல்லை.
- பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.

இதழ் முழுக்க ஈரம் சொட்டச் சொட்ட இருந்தது. இதழில் இருக்கும் ஈரம், தமிழ் மண்ணில் இல்லையே என்கிற ஏக்கம் பிறக்கிறது.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.