அமலாபாலுக்கு திருப்புமுனையாகுமா ஆடை?‘மேயாத மான்’ ரத்னகுமார் இயக்கியுள்ள படம் ‘ஆடை’. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார் அமலா பால்.  ‘ஆடை’ படம் எனது சினிமா வாழ்க்கையில்  திருப்பு முனையாக அமையும்’’ என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். அவரிடம் பட அனுபவத்தைக் குறித்துக் கேட்டோம்.‘‘கதாநாயகியை மையப் படுத்தி ஏராளமான படங்கள் வெளிவருகிறது.

வழக்கமான டெம்ப்ளேட்டில் உருவாகும் கதையில் உடன்பாடு இல்லாத காரணத்தால் படம் நடிப்பதையே விட்டுவிட முடிவு செய்திருந்த தருணத்தில் ‘ஆடை’ படத்தின் கதையைக் கேட்டேன். பிடித்திருந்ததால் உற்சாகமாக ஒப்புக் கொண்டேன். இருந்தாலும்  படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது தயக்கம் இருந்தது.

முதல் நாள் படப்பிடிப்பில் எனக்கு பாதுகாப்பு இருக்குமா என்று நினைத்தேன். என்னுடைய அச்சத்தை நீக்குமளவுக்கு படக்குழு அனைவரும் எனக்கு பாதுகாப்பாக இருந்தார்கள்.இயக்குநர் ரத்னகுமார் பன்முகத் திறமை வாய்ந்தவர். ஒரு காட்சியில் நடிக்கும்போது, நீங்கள் யாரோ போல நடிக்காதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்று கூறி மிகப் பிரமாதமாக நடிக்க வைத்துள்ளார்.

ஆண்களை விட பெண்கள் வலிமையானவர்கள் என்ற ரா.பார்த்திபன் சாரின் கருத்துக்கு புகழ் சேர்க்கும் விதமாக இந்தப் படம் வெளிவருவதில் மகிழ்ச்சி’’ என்றார்.

- ரா