ரஜினியின் அடுத்த படம்!ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, ரஜினியின் அடுத்த படம் குறித்த தகவலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

தன்னுடைய அடுத்த படத்தை யார் இயக்க வேண்டும், யார் தயாரிக்க வேண்டும் என்பதில் ரஜினி தெளிவாக இருக்கிறாராம்.‘பேட்ட’ கார்த்திக் சுப்புராஜ், ‘நேர்கொண்ட பார்வை’ எச்.வினோத் போன்ற இயக்குநர்கள் ரஜினியின் குட்புக்கில் இடம் பிடித்திருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களைத் தாண்டி ரஜினியின் நண்பர் கே.எஸ்.ரவிக் குமார் பக்கமும் காற்று வீசுவதற்கு வாய்ப்பு உள்ளதாம்.

தயாரிப்பாளரைப் பொறுத்தவரை ஒருவர் பெயரைத்தான் கோடம்பாக்கம் அதிகம் உச்சரிக்கிறது. அந்தப் பெயர் கலைப்புலி எஸ்.தாணு. ‘கபாலி’ படத்தைத் தயாரித்தது, ‘காலா’ படத்தை வெளியிட்டது என்று இரண்டிலும் வெற்றி பெற்றதால் அதன் காரணமாகவே ரஜினி தன் அடுத்த படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை தாணுவுக்குக் கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

- ரா