அவதார வேட்டை



இது வேற வேட்டை!

நாயகன் வி.ஆர்.விநாயக், ராதாரவியை ஏமாற்றி பெரும் பணத்தோடு ஊரைவிட்டு ஓடுகிறார். புதிய ஊரில் சோனாவிடம் சேர்ந்து இதே போல ஏமாற்ற திட்டமிடுகிறார். போலீஸான மீரா நாயர் மீது விநாயக்குக்கு காதல் வருகிறது. அதே போலீஸை வைத்து விநாயக்கை மடக்க திட்டமிடுகிறார் ராதாரவி. இதற்கிடையே உடல் உறுப்புகளுக்காக குழந்தைகளை கடத்தும் கும்பலின் அட்டகாசம் வேறு.

இந்தப் புள்ளிகளை எல்லாம் திறமையாக இணைத்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஸ்டார் குஞ்சுமோன்.விநாயக், யதார்த்தமாக இருக்கிறார். மீரா நாயர் மீது உருகும் காட்சிகளில்தான் ரொமான்ஸ் கொஞ்சம் இடிக்கிறது. மீரா நாயர், தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.ராதாரவி, ரியாஸ்கான், பவர்ஸ்டார் சீனிவாசன், சோனா, சம்பத், மகாநதி சங்கர் என்று பெரிய நட்சத்திரப் பட்டாளம். அவரவர் பங்கை அவரவரால் முடிந்தவரை செய்திருக்கிறார்கள்.

மைக்கேலின் பின்னணி இசை ஓக்கே. பாடல்கள்தான் சுமார். காசிவிஸ்வாவின் ஒளிப்பதிவு சிறப்பு.திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் வேட்டை சுவாரஸ்யப்பட்டிருக்கும்.