‘மூடு’ மந்திரம்!ரீடர்ஸ் கிளாப்ஸ்!

அட்டையில் ஐஸ்வர்யாதத்தா படம் அருமை.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

66ஆம் பக்கத்து ஷீத்தலின் அயர்ன் செய்த இடுப்பு, எங்களை காதல் கரை சேர்க்கும் துடுப்பு.
- பி.ராஜேந்திரன், திருவண்ணாமலை.

இது பயோபிக் காலம். கிரிக்கெட் வீரர் காந்தாக ஜீவா நடிப்பது மிகவும் பொருத்தம். ஸ்டார் கிரிக்கெட்டில் கலக்கிய பேட்ஸ்மேன் ஆயிற்றே?
- அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி.

எங்கள் தலைவி ரெஜினாவின் படத்தை முன்னட்டையில் வெளியிடாமல் பின்னட்டையில் வெளியிட்டதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
- கே.கே.பாலசுப்ரமணியன், பெங்களூர்.

பாலிவுட் கனவுக்கன்னி பர்வீன் பாபி குறித்த கட்டுரை பிரமாதம். அவரது முடிவு, கண்ணீரை வரவைக்கக் கூடியதாக இருந்தது.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கொலைகார தாத்தாவாக நடித்து கொலநடுங்க வைத்த கராத்தே வெங்கடேசனின் பேட்டி அருமை.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

குளிரில் நடுங்கிக் கிடந்த எங்களுக்கு இந்தவார புளோஅப் படங்கள் அனைத்துமே சூடேற்றியது என்று கூறினால் மிகையில்லை. குறிப்பாக 18ஆம் பக்க மூடுமந்திரம், அநியாயத்துக்கு மூடு ஏற்றியது.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.