இருட்டில் இருவர் ஆடும் ஆட்டம்?சரோஜாதேவி பதில்கள்

* இரவுக்கு இலக்கணம் என்ன?
- கே.முருகன், திருவண்ணாமலை.
இருட்டாக இருப்பது.

* யாருடைய உதடு எடுப்பு?
- கே.கே.பாலசுப்பிரமணியன், பெங்களூர்.
உதடு என்பது வேறொரு அந்தரங்கமான உறுப்பின் வெளிப்படையான வடிவம் என்கிறார் எழுத்தாளர் பாலகுமாரன். எதையாவது சொல்லப்போயி எதுக்கு சார் பிரச்சினை?

* அந்தரங்கம், ரகசியம்; இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
அந்தரங்கம், சம்பந்தப்பட்டவர்களின் மனசுக்குள் புதைக்கப்பட வேண்டிய ரகசியம். ரகசியம், என்பதே அம்பலமாக்கப் படுவதற்கான அந்தரங்கம்.

* பெண்ணிடம் ஆண், ஆணிடம் பெண்; எதையெல்லாம் மறைக்கக்கூடாது?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
உடல், உள்ளம் இரண்டையுமே மறைக்கக்கூடாது.

* இருட்டில் இருவர் மட்டுமே ஆடும் ஆட்டம்?
- சுவாமி சுப்ரமணியா, பெங்களூர்.
இதென்ன கேள்வி? செஸ்ஸா ஆடமுடியும்?