TOP 5 MOVIE 2018-'96
வாழவைக்கும் காதலுக்கு
எந்த டிரெண்டிலும் எப்போதும் தப்பிக்கும் சப்ஜெக்ட் காதல்தான். நடுத்தர வயதை எட்டிவிட்ட விஜய்சேதுபதியின் கண்ணியக் காதல் வயது வித்தியாசமின்றி அத்தனை பேரையும் உருக வைத்தது. அவரவர் தங்கள் பள்ளி, கல்லூரி நாட்களை திரும்பிப் பார்க்க வைத்தது.
இளையராஜாவின் இசை ஒவ்வொரு தமிழனின் நாடி, நரம்பு, ரத்தம், சதையிலெல்லாம் கலந்துவிட்டிருக்கிறது என்கிற உண்மையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது ‘96’. திரையரங்கில் மட்டுமின்றி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட போதும் பல லட்சம் ரசிகர்களை பரவசப்படுத்தியது இந்த காதல்.
|