TOP 5 MOVIE 2018---கடைக்குட்டி சிங்கம்



குடும்பங்களின் திருவிழா



நீண்டகாலம் கழித்து தமிழ்க் குடும்பங் களை தியேட்டருக்கு படையெடுக்க வைத்த திரைப்படம். கடந்த ஆண்டு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மூலம் அதிரடி காட்டிய கார்த்தி, ஐந்து அக்காக்களுக்கு பொறுப்பான தம்பியாக தாய்மார்களை நெகிழச் செய்தார்.
பீம்சிங் காலத்து நினைவுகளை ரசிகர்களுக்கு காட்டினார். பெரும் நட்சத்திரப் பட்டாளத்தை ஒரு குடும்பக் கதைக்குள் கொண்டுவந்து ஒவ்வொரு காட்சியையும் நவரசங்களால் சுவாரஸ்யப்படுத்திய இயக்குநர் பாண்டிராஜின் சின்சியரான உழைப்பைக் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள் ரசிகர்கள். தியேட்டர்களில் டிக்கெட் கிழித்து டிக்கெட் கிழித்து டயர்டாகி விட்டார்கள் ஊழியர்கள்.