கண் இமைக்கும் நேரத்தில்!



கன்னடத்தில் சமீபத்தில் பெரும் வெற்றி பெற்ற படம் ‘வாசு, நான் பக்கா கமர்ஷியல்’.இந்தப் படம் கொடுத்த தெம்பில் அடுத்து தானே படம் தயாரித்து இயக்க திட்டமிட்டார் இயக்குநர் அஜித்வாசன். இவருடன் தயாரிப்பில் இணைந்திருக்கிறார் நடிகர் நரேன்.

இருவருமாக இணைந்து ‘கண் இமைக்கும் நேரத்தில்’ என்கிற படத்தை தயாரிக்கிறார்கள். அஜித்வாசனே இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளில் பிரும்மாண்டமாக வெளியாகிறது.

விடியற்காலை ஒரு மணி முதல் நான்கு மணி வரை மூன்று மணி நேரங்களில் நடக்கும் சம்பவங்களே மொத்தப் படமுமாம். ஆக்‌ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் கார்த்தி வெளியிட்டார்.

- ரா