நடுப்பக்க பழம் சூப்பர்!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

அயன்புரம் த.சத்தியநாராயணன் எழுதிய ‘மைதாமாவு மஞ்சுளா’ செமத்தியான கதை. அவ்வப்போது ‘வண்ணத்திரை’யில் இப்படிப்பட்ட கதைகளையும் கண்ணில் காட்டுங்கள்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

நடுப்பக்க அனாமிகா பழம் (படம் என்று சொல்லணுமோ?) ஆப்பிள் கணக்கா இருந்தது அப்பு. கனிந்த பழம் தானே விழும்னு தவம் கிடக்கிறோம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

அலங்கார அழகிகளை பக்கம் பக்கமாகப் பிரசுரித்து, பொருத்தமான கமென்டுகளையும் தந்து இந்தத் தீபாவளியை கவர்ச்சி தீபாவளி ஆக்கிவிட்டீர். குறிப்பாக 11ஆம் பக்க சஞ்சிதாஷெட்டியின் புகைப்படமும் சரி, கமென்டும் சரி, அப்படியே கண்களில் நிற்கிறது.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘சர்கார்’ திரைப்படத்தை மெருகேற்றிய ஆர்ட் டைரக்டர் சந்தானத்தின் பேட்டி, சரோஜாதேவியின் ஜிலீர் பதில்கள், ‘திமிரு புடிச்சவன்’ இயக்குநரின் யதார்த்தமான உரையாடல், பாடலாசிரியர் - வசனகர்த்தா தம்பதியினரின் டூயட் பேட்டி, வரலட்சுமி நேர்காணல், இதழ் முழுக்க இதயத்தை நொறுக்கும் கவர்ச்சி அணுகுண்டுகள் என்று இந்தத் தீபாவளிக்கு எழுச்சி ஊட்டிய கவர்ச்சி கல்லாப்பெட்டியாக ‘வண்ணத்திரை’ தீபாவளி ஸ்பெஷல் அமைந்துவிட்டது.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

சாதாரணமாவே சரோஜாதேவி சடுகுடு ஆடுவாப்புலே. தீபாவளி ஸ்பெஷல் வேற. ‘பிரா’ப்ளமான கொஸ்டினுக்கு சரோஜா கொடுத்த ஆய்வறிக்கை அமோகம். நல்லா இரும்மா சரோஜா.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

60-ஆம் பக்கத்து தேவ்ஷி கந்தூரி, பட்டாஸால் கட்டுண்டு கிடந்த காட்சியைக் கண்டு வெடித்துச் சிதறிவிட்டேன்.
- கே.கே.பாலசுப்ரமணியன், குனியமுத்தூர்.

‘ஜருகண்டி’ ரெபாவின் மஞ்சள் ஸ்டில் மங்களகரமாக இருந்தது. பேட்டியும் சூப்பர்.
- கே.நடராஜன், திருவண்ணாமலை.