இரட்டை வேடத்தில் நயன்தாரா!



இணையத்தில் ‘லட்சுமி’, ‘மா’ என்று சர்ச்சைக்குரிய குறும்படங்களை எடுத்து புகழ்பெற்றவர் சர்ஜுன் கே.எம். பெரிய திரையில் முதன்முதலாக அவர் எடுக்கும் படத்துக்கு நயன்தாரா கால்ஷீட் கொடுத்து ஆதரித்திருக்கிறார். ‘ஐரா’ என்று தலைப்பிடப்பட்ட அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு ரசிகர்களிடம் ஏகத்துக்கும் வரவேற்பு.

அமானுஷ்யமான பங்களா செட் ஒன்று போட்டு பரபரப்பாக படமாக்கி வருகிறார்கள். ஹாரர் & த்ரில்லர் என்று இரு ஜானர் ரசிகர்களையும் திருப்திப்படுத்துமாம். முதன்முதலாக நயன்தாரா, ‘ஐரா’வில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்கிற தகவலை மட்டும் சஸ்பென்ஸாக வைத்திருந்தார்களாம். ஆனால், தகவல் எப்படியோ பரவி யார் பார்த்தாலும், ‘டபுள் ஆக்டிங்கா?’ என்று கேட்க, நயன் செம டென்ஷனில் இருக்கிறாராம்.

- மா