நம்பர் ஒன் நாயகி யார்?



கோலிவுட்டின் அத்தனை முன்னணி நடிகர்களோடும் நடித்து விட்ட திலக நடிகைக்கு இப்போது லேடி சூப்பர் ஸ்டாருக்கு இணையான சம்பளம் தருவதற்கு தயாரிப்பாளர்கள் முன்வந்திருக்கிறார்களாம்.
இந்த ஆண்டு திலகத்தின் ஆண்டு. அவர் தொட்டதெல்லாம் பொன்னாகிறது என்பதால், பெரிய நடிகர்களும் திலகத்தோடு டூயட் பாடத்தான் விரும்புகிறார்களாம். இதுவரை கோலோச்சிக் கொண்டிருந்த நம்பர் நடிகையின் இடம் ஆட்டம் கண்டுவிட்டது என்கிறார்கள்.

பொதுவாக ஹீரோயின் யாரென்றெல்லாம் பொருட்படுத்தாமல் நடிக்கும் ‘தல’ நடிகரே கூட அடுத்த படத்துக்கு, “அந்தப் பொண்ணை பேசிப் பார்க்கலாமா?” என்று கேட்குமளவுக்கு திலகத்தின் கொடி கோலிவுட்டில் உயரத்தில் பறக்கிறது. சமீபத்தில் இறக்குமதி ஆன பாலிவுட் இறக்குமதிகள் எல்லாம் பப்படமாகிவிட்ட நிலையில் திலகத்தின் சீக்ரெட் ஆஃப் சக்சஸ் என்னவென்று அறிந்துகொள்ள அடுத்தகட்ட நாயகிகள் ஆவலாக இருக்கிறார்களாம்.

- ராம்