நடுப்பக்க முக்காடு!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

தமிழ் சினிமாவின் புதிய கனவுக்கன்னி ராக்‌ஷி கன்னாவின் பேட்டி அசத்தல். எங்களை ராத்திரி தூக்கத்தைக் கெடுக்க வந்த ராக்‌ஷியை வருக வருகவென வரவேற்கிறோம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

மார்க்கெட் ரேட்டுக்கு மார்க் போடுற பிட்டு படத்தைப் போட்டு மனசை தறிகெட்டு ஓடவெச்சி, ஹாட்டான கேள்விக்கும் ஸ்வீட்டான பதில் கொடுத்து சரோஜா டஃப் கொடுப்பது சூப்பர்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

நீண்டகாலம் கழித்து ‘வண்ணத்திரை’யை மீண்டும் வாசிக்கும் வாய்ப்பு. அதே பழைய வனப்பு. எண்ணமெல்லாம் கிளுகிளுப்பு. மதுக்கிண்ணமாய் மங்கையரின் பளபளப்பு.
- எல்.இரவி, செ.புதூர்.

சினிமா வாய்ப்புக் கேட்ட இளைஞனிடம் திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்பிக்கச் சொன்ன இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் குறித்த ‘பிலிமாயணம்’ பிரமாதம்.
- கே.முருகன், திருவண்ணாமலை.

நடுப்பக்க முக்காடு, கண்டதுமே வேக்காடு.
- சுவாமி சுப்ரமணியா, குனியமுத்தூர்.

பாடலாசிரியர் விவேகா அவர்கள் வேலையின் மதிப்பை உயர்வாக அழகாக எடுத்துரைத்தது சிறப்பு.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

‘வில்லங்கமா பார்க்காதீங்க’ன்னு சொல்லுற சுபிக்‌ஷா, அந்தப் பேட்டிக்கு கொடுத்திருக்கிற ஸ்டில்லே வில்லங்கமா இருக்கே பிரதர்?
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.