பாலாவின் புதிய ஹீரோயின்!முதன்முறையாக பாலா ஒரு படத்தை ரீமேக்குகிறார் என்றால் ஒரிஜினல் எவ்வளவு தீவிரப் படமாக இருந்திருக்க வேண்டும்? ‘அர்ஜுன் ரெட்டி’, தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்கான ‘வர்மா’வின் படப்பிடிப்பை பாலா தொடங்கியதிலிருந்தே எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக ஏறிக்கொண்டிருக்கிறது.
விக்ரமின் மகன் துருவ், இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியை வலைபோட்டுத் தேடி வங்காளத்தில் கண்டடைந்திருக்கிறார். கொல்கத்தா ரசகுல்லா மேகா ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகிறார்.

‘‘பாலா சார் படத்தில் நடிப்பது என்பது பல நடிகர், நடிகைகளின் கனவு என்று எனக்குத் தெரியும். இந்தப் படத்துக்காக பாலா சார் ஆபீஸிலிருந்து எனக்கு அழைப்பு வந்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. என்னை நானே ஒருமுறை கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். ஆடிஷனில் செலக்ட்டானதும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

பொதுவாக பாலா சார் படம் என்றாலே ஹீரோ, ஹீரோயின் உள்பட படத்தில் உள்ள அனைவரின் தோற்றமும் மாறிவிடும். எனக்கும் அப்படித்தான். இந்தப் படத்தில் நடித்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாய் இருந்தது’’ என்று சொல்லும் மேகா முறைப்படி கதக் நடனம் கற்றுக்கொண்டவராம்.

- ரா