ஆம்லேட் போட தோணுது!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

நயன்தாரா நடிக்கும் ‘கோலமாவு கோகிலா’வுக்கு ‘வண்ணத்திரை’ கொடுத்திருக்கும் ப்ரிவ்யூ, படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.
- பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.

17-ஆம் பக்க ஃப்ரீ ரோட்டை பார்த்ததுமே, வண்டியை வேகமா ஓட்டத் தோன்றுவது உண்மைதான்.
- ஜி.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

வாட்ஸப் யுகத்தில் படங்களைத் திட்டுவதே விமர்சனம் என்றாகிவிட்ட காலத்தில் குறைகளைக் குறைத்து, நிறைகளை நிறுத்தி ‘வண்ணத்திரை’ சினிமாக்களை விமர்சிக்கும் அழகே அழகு.
- அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி.

நம்மூர் பார்டர் கடை பரோட்டாவுக்கு இந்தி நடிகர் திலீப்குமாரின் பேத்தி சாயிஷா பெரும் ரசிகை என்பதைக் கேள்விப்பட்டதுமே பரோட்டாவை ஏன் தேசிய உணவாக அறிவிக்கக்கூடாது என்று தோன்றுகிறது.
- பி.ராஜேந்திரன், திருவண்ணாமலை.

நடுப்பக்க சூடான கல்லைக் கண்டதுமே, உங்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே ஆம்லேட் போடத்தான் தோன்றும்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘வண்ணத்திரை’யில் வெளிவரும் ‘டைட்டில்ஸ் டாக்’ தொடரில் பிரபலங்கள் தங்கள் மறுபக்கத்தை மனம் திறந்து எழுதுவது சிறப்பு.
- சுரேஷ், திருச்சிற்றம்பலம்.

‘டிக் டிக் டிக்’ ரித்திகாவின் பேட்டி சூப்பர். எல்லா பத்திரிகைகளுமே ஹீரோயின்களைத்தான் பேட்டிக்காக மொய்க்கிறார்களே தவிர, மற்ற பாத்திரங்களில் நடிப்பவர்களைத் தேடிப்பிடித்து நேர்காணல் செய்வது நம்ம ‘வண்ணத்திரை’ மட்டுமே.
- கவிஞர் வரதன், புதுச்சேரி.