உடற்பயிற்சி!சரோஜாதேவி பதில்கள்

* காதல் தோல்விக்கு சரியான மருந்து?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
‘உடற்பயிற்சி’தான் தீர்வு. புரியுதா?
* வேதாளம் எப்படி முருங்கை மரம் ஏறும்?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
எல்லோரையும் மாதிரி கையையும், காலையும் வெச்சிதான்.
* காதல் கசக்குதே?
- எம்.லோகு, திருவண்ணாமலை.
தேன் குடித்து பழகியவர்களுக்கு பப்பரமிட்டாய் கசக்கத்தான் செய்யும்.
* வளையோசை, கொலுசு ஒலி...
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
மகிழ்ச்சியான தாம்பத்தியத்துக்கு டிடிஎஸ் எஃபெக்டு.
* மசாஜ் செய்துகொள்ள தாய்லாந்துக்கு போகலாமா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
மசாஜ் மட்டுமல்ல; மஜாஜ் கூட கிடைக்கும்.