பழமாவும் இருக்கணும்!



சரோஜாதேவி பதில்கள்

* பழம் நழுவி பாலில் விழுந்தால் என்னாகும்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம். பஞ்சாமிர்தம் ஆகும்.

* தேக்கு மரக்கட்டில்கூட சமயத்தில் உடைந்துவிடுகிறதே?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை. ஆட்டம் ஜாஸ்தின்னு அர்த்தம்.

* நாக்கில் மச்சம் இருந்தால்?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
காரியத்தில் மிச்சம் வைக்கமாட்டார்கள் என்று மச்ச சாஸ்திரம் சொல்கிறது.

* யானை பலம் என்றால் என்ன?
- கே.நடராஜன், திருவண்ணாமலை
யானையோ எலியோ பலமாக இருந்தா மட்டும் பத்தாது. சமயத்தில் பழமாவும் இருந்தாதான் வாழ்க்கை இனிக்கும்.

* பெண்கள் என்னை ‘ப்ரோ’ என்று கூப்பிட்டால் கடுப்பாகிறது...
- வினோத், ராமநாதபுரம்.
‘ப்ரோ’ என்றால் பிரதர் என்று மட்டும் அர்த்தமல்ல; புரோக்கரையும் அப்படித்தான் ஷார்ட்டாகக் கூப்பிடுவார்கள். இரண்டாவதாக இருந்தால்தான் நீங்க ரொம்பக் கடுப்பாகணும்.