கடுப்பேத்தும் கஸ்தூரி!



அந்தக்கால நாயகியான கஸ்தூரி, இப்போது சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கிறார். ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற இடங்களில் அவர் தெரிவிக்கக்கூடிய அரசியல், சினிமா, சமூகக் கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளாகின்றன.

சமீபத்தில் வெளிவந்த ‘தமிழ்ப்படம் 2.0’ டிரெய்லரில் கஸ்தூரியின் அதிரடி ஐட்டம் டான்ஸ் இடம்பெற்றிருந்ததை ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்தார்கள். “இந்த வயசுலே இதெல்லாம் தேவையா ஆன்ட்டி?” என்று அவரைக் கடுப்பேற்றினார்கள்.

இதைத் தொடர்ந்து ரசிகர்களை பதிலுக்கு கஸ்தூரியும் கடுப்பேற்றினார்.“தாத்தா வயதுள்ள நடிகர்கள், பேத்தி வயதுள்ள நடிகைகளோடு டூயட் பாடுகிறார்களே?” என்று அவர் பதிலுக்குக் கேட்க, ‘காலா’ ரிலீஸ் மகிழ்ச்சியில் இருந்த ரஜினி ரசிகர்கள் டென்ஷன் ஆனார்கள்.

- ஒய்2கே