மாதவனுக்கு பெருமை சேர்த்த மகன்!



தான் நடித்த படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தால்கூட மாதவன் இவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டார். மனுஷர், மகிழ்ச்சியில் துள்ளிக் கொண்டிருக்கிறார்.

இல்லையா பின்னே?

அவருடைய 12 வயது மகன் வேதாந்த், சர்வதேசப் போட்டியில் பதக்கம் வென்றிருக்கிறாரே.சமீபத்தில் தாய்லாந்தில் நடந்த சர்வதேச 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலம் வென்றிருக்கிறார் வேதாந்த்.“எனக்கும் என் மனைவி சரிதாவுக்கும் இது பெருமையான தருணம்” என்று நெகிழ்ச்சியோடு சொல்கிறார் மாதவன்.

- யுவா