காமிக்ஸ்!சரோஜாதேவி பதில்கள்

* விஜய் மல்லையாவால் இந்த வயதில் விமானம் ஓட்ட முடியுமா?
- கே.கே.பாலசுப்பிரமணியன், பெங்களூர்.
ஓட்டுவோம்னு நெனைச்சுதான் தன்னம்பிக்கையோடு புது விமானம் வாங்கியிருக்காரு.

* ராதிகா ஆப்தே பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
- கே.நடராஜன், திருவண்ணாமலை.
‘துணி’ச்சல் மிக்கவர். நினைத்ததுமே துறக்கிறார்.

* கவர்ச்சி மழை - கவர்ச்சிப் புயல்; இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
முன்னது மூழ்கடிக்கும்; பின்னது சுழட்டியெடுக்கும்.

* பெண்களின் இதழை அல்வாவோடு ஒப்பிடலாமா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
இன்னும் எது எதுவோடு ஒப்பிடுவீர்களோதெரியவில்லை.

*காமிக்ஸ் படிப்பதுண்டா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
‘காமி’க்ஸில் சரோஜா கில்லின்னு தெரியாதா சரவணன்?